காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - 3 வார பயணமாக அமெரிக்க அரசாங்க ஏற்பாட்டில், அந்நாட்டிற்கு சென்றுள்ளார். INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தை சார்ந்த ஐந்து பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். துவக்கமாக இந்த குழுவினர் - மார்ச் 15 அன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. சென்றடைந்தனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அந்த குழுவினரை - காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை சார்ந்த, வாஷிங்டன் டி.சி. நகரில் வசிக்கும் அலியார் சாஹிப் சந்தித்தார். அலியார் சாஹிப் - 1990 களில் அமெரிக்கா சென்றவர். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் அவர், AIMSINDIA என்ற தொண்டு நிறுவனம் மூலம் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் - அவ்வமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சென்றுள்ள நகர்மன்றத் தலைவர் மற்றும் அவரின் குழுவினரை சந்தித்து, உதவிகள் புரிந்த அலியார் சாஹிப் குறித்து நகர்மன்றத் தலைவர், தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
ஊரை விட்டு 8000 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் - அங்கும் காயலர்களை சந்திப்பது பெரும் மகிழ்ச்சி தான். நம் ஊரை சார்ந்த அலியார் சாஹிப் அவர்களை பலர் அறிந்திருப்பார்கள். கே.டி.எம். தெருவை சார்ந்தவர். அமெரிக்க தலை நகர் வாஷிங்டன் டி.சி.யில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் இங்கு AIMSINDIA என்ற தொண்டு அமைப்பின் தலைவராக தேர்வாகியுள்ளார் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி, மாஷா அல்லாஹ். அவர்களின் பணிகள் மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
தனது வேலை பளுகளுக்கு இடையிலும் அமெரிக்கா வந்துள்ள எங்களை தினமும் சந்தித்தார்கள். எங்களுக்கு தேவையானவற்றை கேட்டறிந்து உடனுக்குடன் - இன்முகத்துடன் - ஏற்பாடு செய்தார்கள். இரண்டு நாட்களாக எங்கள் குழுவினர் அனைவருக்கும் இரவு உணவு வாங்கி வந்து, எங்களுடன் இருந்து உணவருந்தினார்கள். ஜசக்கல்லாஹ் ஹைர், காக்கா.
இவ்வாறு நகர்மன்றத் தலைவரின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|