காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின.
நகர்மன்றத் தலைவர் மற்றும் அவர் குழுவினரின் அனைத்து பயணத் திட்டங்களையும் அமெரிக்க வெளியுறவு துறை சார்பாக Meridian International Center என்ற அமைப்பு வடிவமைத்துள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள
அங்கத்தினர் ஒவ்வொருவரிடமும் - அமெரிக்க பயணத்தில் தாங்கள் காண விரும்பும் முக்கியஸ்தர்கள், அமைப்புகள், செயல்ப்பாடுகள்
போன்றவற்றை அமெரிக்க தூதரகம் கேட்டறிந்து - அவற்றை கருத்தில் கொண்டு - இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (மார்ச் 18) அனைத்தும் Meridian International Center அரங்கில் நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவரின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடந்த MERIDIAN INTERNATIONAL CENTER வளாகம்
காலை 9 மணிக்கு - White Meyer Dining Room அறையில் -
அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சர்வதேச சேவை பள்ளியின் பேராசிரியர் டாக்டர் கேரி வீவர் (Dr. Gary Weaver, Professor, School of
International Service, American University) - அமெரிக்காவின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் வேற்றுமைகள் (U.S. multiculturalism
and diversity) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கேரி வீவர் - ஒவ்வொரு ஆண்டும் - அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் - 100க்கும்
மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்துபவர்.
கலந்துரையாடலை தொடர்ந்து 10:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி முடிந்தது.
அதனை தொடர்ந்து 11 மணி முதல் மதியம் 12:30 மணிவரை - பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதில் ஆண்கள் மற்றும் சிறுவர்களின்
பங்கு (The role of men and boys in ending violence against women) என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இந்தியாவில்
இருந்து சென்றிருந்த குழுவினருடன் - கியர்ஸ்டன் ஸ்டீவர்ட் (Kiersten Stewart, Futures without violence) மற்றும் ஒஸ்வால்டோ
மொண்டோயோ (Oswaldo Montoya, Men Engage) ஆகியோர் பங்கேற்றனர்.
கியர்ஸ்டன் ஸ்டீவர்ட் (Kiersten Stewart, Director, Public Policy and
Advocacy, Futures Without Violence) - FUTURES WITHOUT
VIOLENCE என்ற அமைப்பின் இயக்குனராக உள்ளார். இல்லங்களில் நடக்கும் அத்துமீறல்கள் (கணவன் மனைவியை கொடுமை செய்வது
போன்றவை) குறித்த பிரச்சனைகளை எதிர்கொள்ள 1980 ம் ஆண்டு துவக்கப்பட்ட அமைப்பு FUTURES WITHOUT VIOLENCE.
ஒஸ்வால்டோ மொண்டோயோ (Oswaldo Montoya, Global
Coordinator, Men Engage) - MEN ENGAGE என்ற அமைப்பின் உலகளாவிய
ஒருங்கிணைப்பாளர். இந்த அமைப்பு பெண்களை கண்ணியமாக நடத்த வலியுறுத்தி, பல்வேறு நாடுகளில் செயல்புரியும் - அரசு சாரா மற்றும்
ஐக்கிய நாட்டு சபையுடன் கூட்டான அமைப்புகளின் - கூட்டமைப்பாகும்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
2 மணியளவில், அடுத்து - சமூக நீதி, பொது மற்றும் மனித உரிமைகளை கீழ்மட்டத்தில் இருந்து எவ்வாறு எடுத்துரைப்பது (Grassroots civic participation and
advocacy for social justice, civil and human rights) என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் - ஜஸ்மீட் சித்து (Jasmeet
Sidhu, South Asian Americans Leading Together, SAALT) மற்றும் ராஜ்தீப் சிங் (Rajdeep Singh, The Sikh Coalition) ஆகியோர்
கலந்துக்கொண்டனர்.
ஜஸ்மீட் சித்து (Jasmeet Sidhu, South Asian Americans Leading Together, SAALT) - SAALT என்ற அமைப்பின் சட்டம் மற்றும் திட்டங்கள் நிபுணர். தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளான பங்களாதேஷ், பூடான், இந்திய, நேபால், பாகிஸ்தான், இலங்கை, மால்தீவ்ஸ் போன்ற நாடுகளை பூர்விகமாக கொண்டு 34 லட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க - 2000 ம் ஆண்டில் துவக்கப்பட்ட அமைப்பு SOUTH ASIAN AMERICAN LEADERS OF TOMORROW (SAALT) ஆகும்.
ராஜ்தீப் சிங் (Rajdeep Singh, Director of Law and Policy, The Sikh Coalition) - The Sikh Coalation என்ற அமைப்பின் சட்டம் மற்றும் திட்டங்கள் பிரிவு இயக்குனர் ஆவார். SIKH COALTION அமைப்பு அமெரிக்காவின் மீது செப்டம்பர் 11, 2001 இல் தொடரப்பட்ட தாக்குதலுக்கு பிறகு - சீக்கியர்களை சிலர் முஸ்லிம்கள் என நினைத்து தாக்கியதை தொடர்ந்து, அக்டோபர் 2001 இல் துவக்கப்பட்டதாகும்.
அமெரிக்க அரசாங்க தரப்பில் நிகழ்ச்சிகளை நடத்திய மற்றும் ஏற்பாடு செய்திருந்தவர்களுக்கு - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் சிறு நினைவு
பரிசும், காயல்பட்டினம் பற்றிய அறிமுக தகவலும், தனது பணி குறித்த அறிமுக தகவலும் வழங்கினார்.
3:30 மணியளவில் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுற்றது. சிறிய ஓய்வுக்கு பின் - வாஷிங்டன் நகரின் பிரதான அருங்காட்சியகங்களை காண குழுவினர் சென்றனர்.
SMITHSONIAN INSTITUTION நடத்தும் இயற்கை வரலாறு தேசிய அருங்காட்சியகம் (National Museum of Natural History)
இந்தியாவில் இருந்து அமெரிக்க கல்லூரியில் பயில வந்திருந்த மாணவியுடன் ...
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|