காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விபரம் வருமாறு:-
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் - ஹிஜ்ரீ 1435ஆம் ஆண்டு வைபவங்களுக்கு புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 19, 20 நாட்களில் (புதன், வியாழன்), இரண்டு அமர்வுகளாக 20.30 மணிக்கு மஜ்லிஸ் ஹல்காவில், அதன் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ, ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் ஆகியோர் இரு நாட்களின் ஈரமர்வுகளையும் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தனர். கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து, மஜ்லிஸ் அங்கத்தினரும், அபிமானிகளுமான
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாமும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் துணைத்தலைவருமான ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர்
எஸ்.எல்.அஹ்மத் ஆலிம்
எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல்
ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் மஃபிரத் - பிழைபொறுப்பிற்காக துஆ இறைஞ்சப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆ இறைஞ்சினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டின் வரவு - செலவு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
நடப்பு 87ஆம் ஆண்டு மஜ்லிஸ் வைபவ
துவக்க நாள் 01.05.2014 வியாழக்கிழமை என்றும்,
மே 30ஆம் நாளன்று வெள்ளிக்கிழமை - ஜும்ஆ நாளாக இருப்பதால், நிகழ்ச்சிகளை ஒரு நாள் நீட்டித்து, துஆ நாள் (நிறைவு நாள்) 31.05.2014 சனிக்கிழமை என்றும்,
நேர்ச்சை நாள் 01.06.2014 ஞாயிற்றுக்கிழமை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மஜ்லிஸ் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம்
துணைத் தலைவர்:
டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம்
மேலாளர்கள் (மேனேஜர்):
எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப்
ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத் (கம்பல்பக்ஷ்)
இணைச் செயலாளர்கள்:
(1) ஹாஜி எஸ்.எம்.கபீர்
(2) ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப்
(3) எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம்
(4) ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல்
துணைச் செயலாளர்:
ஹாஜி கே.எம்.சாமு ஷிஹாபுத்தீன்
வைபவ கமிட்டி தலைவர்கள்:
(1) ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ்
(2) ஹாஜி எம்.ஐ.மூஸா நெய்னா
(3) எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்
இவ்வாறாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹாங்காங் கவ்லூன் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த - மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தகவல்:
A.L.முஹம்மத் நிஜார்
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் கடந்தாண்டிற்கான (ஹிஜ்ரீ 1434) [86ஆம் ஆண்டிற்கான] புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|