தமிழகத்தில் 30 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி இன்று (வியாழக்கிழமை) அறிவித்தது. இதில், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் இளம் தலைவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கூட்டணி அமையாமல் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், மூத்த தலைவர்கள் பலரும் களமிறங்க தயங்கியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியல்:
மத்திய சென்னை - சி.டி. மெய்யப்பன்
ஸ்ரீபெரும்புத்தூர் - அருள் அன்பரசு
காஞ்சிபுரம் - பி.விஸ்வநாதன்
அரக்கோணம் - நேசை ராஜேஷ்
வேலூர் - ஜெ.விஜய் இளஞ்செழியன்
திருவண்ணாமலை - ஏ.சுப்பிரமணியம்
ஆரணி - எம்.கே.விஷ்ணு பிரசாத்
கள்ளக்குறிச்சி - ஆர்.தேவதாஸ்
சேலம் - மோகன் குமாரமங்கலம்
நாமக்கல் - ஜி.ஆர்.சுப்பிரமணியம்
ஈரோடு - பி.கோபி
திருப்பூர் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
நீலகிரி (தனி) - பி.காந்தி
கோவை - ஆர்.பிரபு
திண்டுக்கல் - என்.எஸ்.வி. சித்தன்
திருச்சி - எஸ்.எம்.டி. சாருபாலா தொண்டைமான்
பெரம்பலூர் - எம்.ராஜசேகரன்
கடலூர் - கே.எஸ்.அழகிரி
சிதம்பரம் (தனி) - டாக்டர் பி.வள்ளல் பெருமாள்
மயிலாடுதுறை - மணிசங்கர் அய்யர்
நாகப்பட்டினம் (தனி) - டி.ஏ.பி. செந்தில் பாண்டியன்
தஞ்சாவூர் - டாக்டர் கிருஷ்ணசாமி வாண்டையார்
சிவகங்கை - கார்த்தி ப.சிதம்பரம்
மதுரை - பி.என்.பாரத் நாச்சியப்பன்
தேனி - ஜே.எம். ஆருண் ரஷீத்
விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
ராமநாதபுரம் - திருநாவுக்கரசர்
தூத்துக்குடி - எ.பி.சி.வி. சண்முகம்
தென்காசி - டாக்டர் கே.ஜெயக்குமார்
திருநெல்வேலி - எஸ்.எஸ். ராமசுப்பு
தகவல்:
தி இந்து
|