இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது புகார் தெரிவிப்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் பின்வருமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்:-
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
தேர்தல் தொடர்பான நன்னடத்தை விதிமீறல்களை புகாராகத் தெரிவிக்கவும், தேர்தல் தொடர்பான விபரங்களைத் தெரிந்துகொள்ளவும், 1800 425 7040 என்ற கட்டணமில்லா (Toll Free) தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோ அல்லது thoothukudi2014complaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டோ தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், 89031 35086 என்ற கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், படங்களை அனுப்பியும் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. |