இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் - ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
தனக்கு வாக்கு கேட்பதற்காக, இன்று (மார்ச் 20) நண்பகல் 11.00 மணியளவில் காயல்பட்டினம் வந்த அவர், நகரிலுள்ள முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து, சால்வை அணிவித்து, ஆதரவு கோரினார்.
திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், நகர நிர்வாகிகளான எம்.என்.சொளுக்கு, பன்னீர் செல்வம், யு.நவ்ஃபல் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
தகவல்:
பாட்டா சதக் உமர்
படங்கள்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக...
பாட்டா மஹ்மூத் |