தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளின் பட்டியலை, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிமுகக் கூட்டம் சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
அதன்படி, தமிழகத்தில் தேமுதிக - 14, பாஜக - 8, பாமக - 8, மதிமுக – 7, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1, இந்திய ஜனநாயகக் கட்சி - 1 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
யாருக்கு எந்தெந்த தொகுதி?
தேமுதிக: திருவள்ளூர் (தனி), வடசென்னை, மத்திய சென்னை, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், நாமக்கல், கடலூர், மதுரை மற்றும் நெல்லை.
பாஜக: தென்சென்னை, வேலூர், கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி.
பாமக: அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆரணி, சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.
மதிமுக: காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர். ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, தென்காசி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: பொள்ளாச்சி
இந்திய ஜனநாயக கட்சி: பெரம்பலூர்
இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ண, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரி வேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தகவல்:
தி இந்து
|