காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின.
மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளின் துவக்கமாக (மார்ச் 19) - சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த இந்திய குழுவினரின் அமெரிக்க பயணத்திற்கு ஏற்பாடு
செய்திருந்த அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகத்தின் (DEPARTMENT OF STATE)
தலைமை அலுவலகத்திற்கு - காலை 9 மணியளவில், குழுவினர் சென்றனர்.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகத்தின் Harry S Truman கட்டிடத்தில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளுடன்
சந்திப்பு நடந்தது. ஃபாரெஸ்ட் யங் (Forest Yang, Senior Political Officer, Office of India Affairs), லாரா பிரவுன் (Laura Brown
Public Diplomacy Officer for India and Bhutan), ஷான் கேசி (Shaun Casey, Special Advisor for Faith-based Community
Initiatives), ராதிகா பிரபு (Radhika Prabhu, Senior Advisor for South Asia, Secretary’s Office of Global Women’s Issues), கிம்
நடோலி (Kim Natoli, Deputy Director, Office of Global Youth Issues) - ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர். இந்திய -
அமெரிக்க உறவுகள் (India – U.S. relations) பற்றி கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. இந்த சந்திப்புகள் 11 மணியளவில் நிறைவுற்றன.
இந்த சந்திப்பில் எய்லீன் ஒ கானர் (Eileen O’Connor, Deputy Assistant Secretary for South and Central Asia) மற்றும் ரஷாத் ஹுசைன்
(Rashad Hussain, President’s Envoy to the Organization of Islamic Cooperation) ஆகியோர் கலந்துக்கொள்வதாக இருந்தது. தவிர்க்க
முடியாத காரணங்களால் அவர்களால் கலந்துக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
எய்லீன் ஒ கானர் - சி.என்.என். உட்பட பல
தொலைக்காட்சி ஊடங்களில் மூத்த செய்தியாளராக பல நாடுகளில் பணியாற்றியவர். ரஷாத் ஹுசைன் இந்திய பூர்விகம் கொண்டவர். பாலஸதீன்
உட்பட 57 நாடுகள் அடங்கிய ஜித்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்புரிந்து வரும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கான அமெரிக்க
ஜனாதிபதியின் சிறப்பு தூதர். குர்ஆனை மனனம் செய்த ஹாபிழும் ஆவார்.
Center for American Progress (CAP) - 2003 ம் ஆண்டு துவக்கப்பட்ட
தனியார் அமைப்பாகும். இந்த அமைப்பு - 21ம் நூற்றாண்டில், அமெரிக்கா எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகள் குறித்து தீர்வுகளை பரிந்துரைக்க
பல திட்டங்களை வடிவமைக்கிறது. இந்த அமைப்பின் PROGRESS 2050 என்ற குழுவின் திட்டங்கள் ஆய்வாளர் ஃபராஹ் அஹமத் (Policy Analyst,
Progress 2050). இவர் - 2013 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபமா பதவியேற்பு குழுவின் உறுப்பினராக அங்கம் வகித்தவர்.
இந்த அமைப்பின் வாஷிங்டன் டி.சி. அலுவலகத்தில் - ஃபராஹ் அஹமத் மற்றும் இந்திய குழுவினர், வறுமையை தடுக்க, ஒழிக்க வழிமுறைகள் - நீதி கிடைத்திட
வழிவகுத்தல் (Strategies for preventing and ending poverty; access to justice) என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடத்தினர். 1 மணிக்கு துவங்கிய
கலந்துரையாடல், 2:30 மணி வரை நடந்தது.
அமெரிக்க பாராளுமன்றத்தில் (CONGRESS) இரு அவைகள் உள்ளன. அவை SENATE மற்றும் HOUSE OF REPRESENTATIVES ஆகும். அமெரிக்க
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் (சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும்) இரு உறுப்பினர்கள் - 6 ஆண்டு கால பதவி வகிக்க -
SENATE அவைக்கு - மொத்தம் 100 உறுப்பினர்கள் (50 மாநிலங்கள்) என மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்புப்படுவர்.
மற்றொரு சபையான HOUSE OF REPRESENTATIVES சபையில் 435 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலமும் (50 மாநிலங்கள்), தனது மக்கள்
தொகைக்கு ஏற்றார் போல் - 2 ஆண்டு கால பதவி வகிக்க - உறுப்பினர்களை, இந்த அவைக்கு தேர்வு செய்து அனுப்பும்.
மாலை 3 மணிக்கு அமெரிக்க பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் (CONGRESS) - Rayburn House அலுவலக கட்டிடத்தில் உள்ள HOUSE OF
REPRESENTATIVES சபையின் டெட்ராய்ட் பகுதி உறுப்பினர் ஜான் கான்யர்ஸ் (JOHN
CONYERS JR., 14th Congressional District, Detroit, Michigan) அலுவலகத்திற்கு குழுவினர் சென்றனர். ஜான் கான்யர்ஸ் - அமெரிக்க
பாராளுமன்றத்தில் 1965 முதல் உறுப்பினராக உள்ளார். மிக நீண்ட காலம் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அங்கு ஜான் கான்யர்ஸ் அலுவலகத்தை சார்ந்தவரும், அமெரிக்க பாராளுமன்றத்தின் HOUSE OF REPRESENTATIVES சபையின் நீதி குழுவில் அங்கம்
வகிப்பவருமான கீனன் கெல்லரை (Keenan Keller, House Judiciary Committee) அவர்கள் சந்தித்தனர். கீனன் கெல்லர் - உறுப்பினர் ஜான்
கான்யர்ஸ், பொது மற்றும் மனித உரிமைகள் துறைகளில் ஆற்றியுள்ள பணிகள் (civil and human rights) குறித்து விளக்கம் அளித்தார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
[Administrator: புகைப்படம் இணைக்கப்பட்டது @ 6:00 pm / 21.03.2014]
|