காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று மாலை அமெரிக்கா சென்றடைந்தார்.
ஜெர்மனி நாட்டின் முக்கிய நகரமான ஃப்ரான்க்ஃபர்ட் வழியாக, அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. சென்றுள்ள
நகர்மன்றத் தலைவர், தான் அங்கிருக்கும் ஏறத்தாழ 3 வாரங்களில், பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார்.
ஓய்வு தினமான மார்ச் 16 அன்று நகர்மன்றத் தலைவர் மற்றும் அவரது குழுவினர் - அமெரிக்க தலைநகரின்
முக்கிய இடங்களை பார்த்தனர்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று அதிகாரப்பூர்வமாக துவங்கின. காலை 9:30 மணிக்கு - அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள, Hampton Inn – Convention Center அரங்கில் - அமெரிக்க
வெளியுறவு அமைச்சகத்தை சார்ந்த கார்லோஸ் அரநாகா (Carlos Aranaga, Program Officer, South and Central Asia Branch, Office of
International Visitors Bureau of Educational and Cultural Affairs, U.S. Department of State) - குழுவினரின் அமெரிக்க பயணம்
குறித்து விளக்க உரையாற்றினார்.
அமெரிக்க அரசாங்கத்திற்காக இக்குழுவிற்கான நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்கும் Meridian
International Center நிறுவனத்தின் ரெனீ வர்திங்டன் (Renée Worthington, Program Officer, Meridian International Center)
மற்றும் மேகன் செல்லப்பா (Meghan Chilappa, Program Associate, Meridian International Center) ஆகியோர் உடனிருந்தனர்.
அறிமுகங்களை தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. மதியம் 12 மணி வரை நீடித்த அறிமுக நிகழ்ச்சிகள் முடிந்தப்பின் - குழுவினர்,
அமெரிக்க வெளியுறவு துறை ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு விருந்திற்கு - பிரசித்தி பெற்ற OCCIDENTAL GRILL AND SEA FOOD உணவகத்திற்கு சென்றனர்.
OCCIDENTAL GRILL AND SEA FOOD உணவகம் - அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ளது. அமெரிக்க அரசியல், கலாச்சாரம், விளையாட்டு போன்ற துறைகளின் முக்கியஸ்தர்கள் மத்தியில் பிரபலியமான இந்த உணவகத்தின் சுவர்களில் - இங்கு உணவு அருந்தி சென்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் உட்பட பல பிரபலங்களில் புகைப்படங்கள் - அவர்களின் கையெழுத்துடன் - இடம்பெற்றுள்ளது. 1906 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த உணவகம், சில ஆண்டுகளுக்கு முன் - சற்று இடம் மாற்றி, புதுப்பிக்கப்பட்டது.
இந்த உணவு விருந்தில், குழுவினருடன் - கார்லோஸ் அரநாகா (Carlos Aranaga, Program Officer, South and Central Asia Branch, Office
of International Visitors Bureau of Educational and Cultural Affairs, U.S. Department of State), ரெனீ வர்திங்டன் (Renée
Worthington, Program Officer, Meridian International Center), மேகன் செல்லப்பா (Meghan Chilappa, Program Associate, Meridian
International Center), விலாடக் கொபின்ஸ்கீ (Wladek Kopinski, English Language Officer), அருண் முத்துகுமார் (Arun Muthukumar,
Simultaneous Tamil Language Interpreter) மற்றும் ப்ரீதா காந்தி (Preetha Gandhi, Simultaneous Tamil Language Interpreter)
ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மதிய உணவு விருந்தை தொடர்ந்து, Capital Communications Group, Inc.
என்ற நிறுவனத்தின் நிறுவனரும், அதன் தலைவருமான அக்ரம் எலியாஸ் (Akram Elias, President, Capital Communications Group, Inc.)
- அமெரிக்க நாட்டின் கூட்டாச்சி முறை (FEDERALISM), எவ்வாறு அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது, அதன் மூலம் எவ்வாறு முடிவுகள்
எடுக்கப்படுகிறது போன்ற விஷயங்கள் குறித்து உரை நிகழ்த்தினார். அக்ரம் எலியாஸ் - அமெரிக்க வெளியுறவு கொள்கை துறையில் 24 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். அதனை தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது. மாலை 3 மணி
துவங்கிய இந்த நிகழ்ச்சி 5 மணியளவில் நிறைவுற்றது.
அமெரிக்க அரசாங்க தரப்பில் நிகழ்ச்சிகளை நடத்திய மற்றும் ஏற்பாடு செய்திருந்தவர்களுக்கு - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் சிறு நினைவு பரிசும்,
காயல்பட்டினம் பற்றிய அறிமுக தகவலும், தனது பணி குறித்த அறிமுக தகவலும் வழங்கினார்.
கார்லோஸ் அரநாகா, மேகன் செல்லப்பா, அருண் முத்துகுமார் மற்றும் ப்ரீதா காந்தி ஆகியோருடன்...
Capital Communications Group, Inc. என்ற நிறுவனத்தின் நிறுவனரும், அதன் தலைவருமான அக்ரம் எலியாஸ் உடன்...
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|