தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 17) வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்.
'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேட்பாளர் பட்டியல் விவரம்:
வடசென்னை - உ. வாசுகி
கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன்
கன்னியாகுமரி - ஏ.வி. பெல்லார்மின்
மதுரை - பா. விக்ரமன்
திருச்சி - எஸ். ஸ்ரீதர்
விருதுநகர் - கே. சாமுவேல்ராஜ்
திண்டுக்கல் - என். பாண்டி
விழுப்புரம் (தனி) - ஜி. ஆனந்தன்
தஞ்சாவூர் - எஸ். தமிழ்ச்செல்வி
முன்னதாக, அதிமுக அணியில் இருந்து பிரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தலா 9 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்தன.
தென்காசி, நாகப்பட்டினம், புதுச்சேரி, திருப்பூர், சிவகங்கை, தருமபுரி, கடலூர், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
தி இந்து
|