தமிழக அரசின் சார்பில், பிறந்து 6 மாதம் ஆனது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை, மாலைக்கண் நோய் தடுப்பு - Vitamin A Solution மருந்து புகட்டும் முகாம், ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் என ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு மார்ச் மாதத்தில், காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் - அதன் மருத்துவ அலுவலர் டாக்டர் ப்ரியாவின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தை - ஓடக்கரை, பண்டகசாலை, கோமான் தெரு என 3 பகுதிகளாகப் பிரித்து, இம்மாதம் 17, 18, 20, 21 தேதிகளில் (திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி) அந்தந்த பகுதிகளில் 3 இடங்களில் பின்வரும் பட்டியல் படி முகாம் நடத்தப்படுகிறது:-
4 நாட்கள் நடைபெறும் இம்முகாம்களில், பிறந்து 6 மாதம் ஆனது முதல் 5 வயதுக்குட்பட்ட 1,948 குழந்தைகளுக்கு மருந்து புகட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
முகாம் பணிகளை, காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரான கஸ்தூரி பாய், ரெனினா கோமஸ் ஆகியோருடன், நகரின் அனைத்து அங்கன்வாடி சத்துணவு மையங்களைச் சேர்ந்த 14 ஆசிரியையரும் இணைந்து செய்து வருகின்றனர்.
காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு அலுவலக வளாகத்தில் இன்று குழந்தைகளுக்கு சொட்டுமருந்து புகட்டப்படும் காட்சி:-
|