நீண்ட இடைவெளிக்குப் பின் காயல்பட்டினத்தில் துவக்கப்பட்ட ஒருவழிப்பாதை - புதிய சாலை அமைப்புப் பணிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணங்காட்டி, தேர்தல் அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமாரைத் தொடர்புகொண்டு - இது ஏற்கனவே ஒப்பந்தம் விடப்பட்ட பணி என்பதைத் தெளிவுபடுத்தியதையடுத்திய பின், பணியைத் தொடர அவர் இசைவளித்ததையடுத்து, மீண்டும் சாலை அமைப்புப் பணிகள் தொடர்கிறது.
பழைய சாலை கிளறியெடுக்கப்பட்ட நிலையில், புதிய சாலையின் முதல் அடுக்கு அமைப்பதற்கான கருங்கல் மூலப்பொருட்கள் தற்போது எல்.கே.லெப்பைத்தம்பி சாலை - கூலக்கடை பஜாரில் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ளது.
|