காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று மாலை அமெரிக்கா சென்றடைந்தார். ஜெர்மனி நாட்டின் முக்கிய நகரமான ஃப்ரான்க்ஃபர்ட் வழியாக, அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. சென்றுள்ள நகர்மன்றத் தலைவர், தான் அங்கிருக்கும் ஏறத்தாழ 3 வாரங்களில், பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர் சென்றுள்ளனர்.
இன்று (மார்ச் 17) காலை முதல், அதிகாரப்பூர்வமாக பயண நிகழ்ச்சிகள் - அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் - துவங்குகின்றன.
ஓய்வு தினமான மார்ச் 15 அன்று குழுவினர் அமெரிக்க தலைநகரின் முக்கிய இடங்களுக்கு சென்றனர்.
அமெரிக்க ஜனாதிபதியின் இல்லமான வெள்ளை மாளிகை (WHITE HOUSE) முன்பு
அமெரிக்க ஆட்சிஸ்தலமான காங்கிரஸ் (CONGRESS) வளாகம் முன்பு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் நினைவகம் (LINCOLN MEMORIAL) முன்பு
வியட்நாம் போரில் மரித்த அமெரிக்கர்களுக்கான நினைவிடத்தில் (VIETNAM WAR VETERANS MEMORIAL)
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும் |