காயல்பட்டினத்தில் பெயிண்டிங் தொழில் செய்துவருவோர் இணைந்து, “காயல்பட்டினம் பெயிண்டர்கள் நலச் சங்கம்” எனும் பெயரில் புதிய அமைப்பைத் துவக்கியுள்ளனர். இதற்கான கூட்டம், இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில், எஸ்.ஏ.காதர் தலைமையில், காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது.
நகரில் பெயிண்டிங் தொழில் செய்து வருவோரின் பணிகளிலும், பெறும் பலன்களிலுமுள்ள நிறைகுறைகள் இக்கூட்டத்தில் அலசப்பட்டு, நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - புதிய நிர்வாகிகள் தேர்வு:
காயல்பட்டினத்தில் பெயிண்டிங் தொழில் செய்து வருவோருக்காக, “காயல்பட்டினம் பெயிண்டர்கள் நலச் சங்கம்” என்ற பெயரில் அமைப்பைத் துவக்கிட இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, பின்வருமாறு நிர்வாகிகளை இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது:-
தலைவர்:
எஸ்.ஏ. காதர்
துணைத் தலைவர்:
வி.சுயம்புலிங்கம்
செயலாளர்:
கே.சபாபதி
துணைச் செயலாளர்:
என்.எஸ் கனி
பொருளாளர்:
மீரான்
தீர்மானம் 2 - பிறரது பிரச்சினைகளுக்கு சங்கம் பொறுப்பாகாது:
காயல்பட்டினம் பெயிண்டர்கள் நலச் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதோரை வேலைக்கு அழைத்துச் சென்று, அவர்களால் பிரச்சினைகள் ஒருக்கால் ஏற்பட்டால் அதற்கு சங்கம் பொறுப்பாகாது.
தீர்மானம் 3 - கட்டிட ஒப்பந்தக்காரர்கள், பெயிண்ட் கடை உரிமையாளர்களுக்கு வேண்டுகோள்:
பெயிண்டிங் தொழிலை மட்டுமே நம்பி பல குடும்பங்கள் இந்நகரில் வாழ்ந்து வருவதால், அவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, கட்டிட ஒப்பந்தக்காரர்களும் (பில்டிங் கான்ட்ராக்டர்ஸ்), பெயிண்ட் கடை வைத்திருப்போரும் சொந்தமாக பெயிண்டிங் வேலைகளை எடுத்துச் செய்வதைத் தவிர்த்துக்கொள்ள இக்கூட்டம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 - மாதாந்திர கூட்டம்:
காயல்பட்டினம் பெயிண்டர்கள் நலச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - வெள்ளிக்கிழமை வேலை நிறுத்த நேரம்:
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று 12.00 மணி முதல் 14.00 மணி வரை, பெயிண்டிங் வேலைகளை அனைவரும் நிறுத்திக்கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தகவல்:
A.லெப்பை ஸாஹிப் (ஏ.எல்.எஸ். மாமா)
களத்தொகுப்பு & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |