ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள அனைத்து மத்ரஸாக்கள் – பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்கள் - ஆசிரியையருக்கும், பள்ளிவாசல்களின் இமாம்கள் - முஅத்தின்களுக்கும் முழு உடல் இலவச பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும், பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எங்களது துபை காயல் நல மன்றத்தின் சார்பாக, நமதூரின் அனைத்து பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கும், மத்ரஸா ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கும், பள்ளிவாசல்களின் இமாம், முஅத்தின் மற்றும் பணி செய்பவர்களுக்கும், நமதூர் KMT மருத்துவமனையில் முழு உடல் பரிசோதிப்பதற்கான (Master Health Checkup) ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, மத்ரஸா ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கும், பள்ளிவாசல்களின் இமாம், முஅத்தின் மற்றும் பணி செய்பவர்களுக்குமான உடல் பரிசோதனை துவங்கிவிட்டது.
எனவே, மத்ரஸா மற்றும் பள்ளிவாசல்களில் பணியாற்றுவோர், தத்தமது நாஜிர் அல்லது முத்தவல்லிகளிடம் தங்களுக்குண்டான டோக்கன்களைப் பெற்றுக்கொண்டு, KMT மருத்துவமனையின் மேலாளர் ஜனாப் அப்துல் லத்தீஃப் அவர்களை +91 98943 91271 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, உங்களுக்கான தேதியை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட நபர்களில் யாருக்காவது TOKEN கிடைக்காவிட்டால், மன்ற ஆலோசகர் ஹாஜி ராவன்னா அபுல் ஹஸன் அவர்களின் துபை எண்ணிலோ அல்லது உள்ளூர் எண்ணிலோ (+91 97897 91204) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |