செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்! காயலர்களும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆம் ஆத்மி - தேர்ந்தெடுத்தது ஏன் ? posted byS.A.Muhammad Ali (Velli) (Kayalpatnam)[25 March 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 33935
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆம் ஆத்மி கட்சிக்கு பொது மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதை கண்டு மற்ற கட்சிகள் பீதியில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அதனால் தான் உங்கள் வோட்டை வீண் விரையம் ஆக்கி விடாதீர்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பதற்கான சில காரணங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
1. நடக்க இருக்கும் பொது தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மை பெற போவதில்லை என்று அனைவரும் அறிவோம்.
காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் வெற்றி பெற வாய்ப்பில்லை.
நம் தமிழகத்தில் உள்ள கூட்டணிகள் பிஜேபி, அதிமுக, திமுக ஆகிய மூன்று கூட்டணிகளும் முறையே பிஜேபி யின் A, B, C அணிகள் என்பதை அறிந்தும் ஒருவன் தலையை எடுப்பேன் என்கிறான், மற்றவர் கையை எடுப்பேன் என்கிறார், அடுத்தவர் விரலை எடுப்பேன் என்கிறார்.
அதனால் நான் விரலை எடுப்பவருக்கு ஆதரவு அளிப்பேன் என்று சொல்லுவது பொருத்தமாக இல்லை.
காயிதே மில்லத் சாஹிப் அவர்களுக்கு பின் தமிழகத்தில் இஸ்லாமியர்களை திராவிட கட்சிகளுக்கு அடகு வைத்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தான் முஸ்லிம் தலைவர்களின் பங்கு இருக்கின்றது. இது போன்று எண்ணற்ற பொதுமக்கள் வேறு வழியில்லாமல் சில கட்சிகளை ஆதரித்து வந்த வேளையில் ஒரு விடிவெள்ளியாக பிறந்ததே ஆம் ஆத்மி.
2. ஆம் ஆத்மி கட்சியின் கட்டமைப்பே கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டத்திற்கு செல்கிறது. அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்தே தலைமை உறுப்பினர்களை தேர்ந்து எடுக்கிறார்கள்.
3. தேர்ந்து எடுக்கப்படும் வேட்பாளர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்கிர்ரார்களா என்று சரி பார்க்கப்படுகிறது.
4.அந்தந்த தொகுதி மக்களால் வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
5.இங்கு கட்சியின் பண பரிமாற்றங்கள் கணக்கு காட்டப்படுகிறது.
6. கார்பரேட் கம்பனிகளுக்கு அடிபணிவதில்லை
7. ஒரு குடும்பத்தில் இரண்டு வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
8. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் அதிகமான முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்துள்ள ஒரே கட்சி ஆம் ஆத்மி.
9.தற்போது நமது தொகுதியில் பல முனை போட்டி நிலவுவதாலும், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு உள்ளதாலும், மேலும் அனைத்து மீனவ சமுதாய வோட்டுக்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக இருப்பதாலும் திரு.புஷ்பராயன் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
எனவே ஆம் ஆத்மிக்கு வோட்டளிப்பதால் உங்கள் வோட்டு வீணாக போவதில்லை.
10.ஊழல் என்ற நோயால் நம் நாடு பாதிக்கப்பட்டுள்ளது.அதனை துடைப்பத்தால் துப்புரவு செய்யுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross