செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் மாசுக்கு எதிராக ஆம் ஆத்மி போராடும்! மற்ற கட்சிகள் சொல்ல முடியுமா? ஆம் ஆத்மி கேள்வி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம் வாக்கு வீணடிப்பதற்கு அல்ல. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[28 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34013
முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு எங்கள் கொள்கை இல்லை என்று ஆம் ஆத்மி கூறினாலும் அவர்களுக்குத்தான் எங்கள் ஆதரவு,இஸ்லாமிய பாதுகாப்பு சட்டமாகிய சிவில் சட்டத்தை ஏற்க முடியாது என்று கூறும் ஆம் அத்தமிக்கு எங்கள் ஆதரவு,காஷ்மீர் மக்களுக்கு மட்டும் தனி அந்தஸ்தா அதற்க்கு ஆம் ஆதமின் கட்சிக்கு உடன்பாடில்லை, இந்தியவில் எல்லோரும் சமமாம்தான் என்று சொன்னாலும் எங்கள் ஆதரவு ஆம் அத்தமிக்குதான்! நாளைக்கு பசுவதை சட்டம்,மதமாற்று தடை சட்டம் போன்ற சட்டம் ஆம் ஆத்மி கொண்டுவந்தாலும் அதற்கும் எங்கள் ஆதரவுதான்!
ஏனனில் ஊழலை ஒழிப்பதில் எள்ளளவும் முரண்படாத கட்சி ஆகும், ஆனால் ஊழலில் ஊற்றுகோள் என்று காங்ரஸய் கடித்து கொதறிவிட்டு அந்த கட்சின் ஆதரவோடு தில்லையில் ஆட்சி அமைத்தாலும் அக் கொள்கையை சரிகாணும் எங்களுக்கு ஆம் ஆத்மி தான் வேண்டும்! டெல்லியில் காங்கரஸின் ஐந்து வேட்பாளர்களின் ஆதரவோடு ஐந்து வருடங்கள் முழுமையும் ஆழமுடியாதென்பதை ஐந்து வயது மனவளர்ச்சி குன்றிய மழலைக்குகூட தெரியும்,அப்படி தெரிந்தும் ஆட்சிசுகம் நாடி ஆட்சி யமைத்த ஆம் ஆத்மிக்குத் தான் எங்கள் ஆதரவு! தனக்கு ஆதரவு தந்த அந்த ஐந்து வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இவர்கள் ஊழல் பேர்வழிகள் என்று பிரசாரம் செய்து எதிர்த்து விட்டு,தேர்தல் முடிந்தவுடன் அந்த ஐந்து பேர்களின் ஆதரவை அணுவளவும் வெட்கமில்லாமல் பெற்று ஆட்சியமைத்த ஆம் ஆத்மி கட்சிக்குதான் எங்கள் ஆதரவு என்று ஒரு சிலர்கள் அர்த்தமற்ற பிடிவாதத்தாலும்,வறட்டு கவ்ரவத்தாலும் தாங்களும்குழம்பி நம்மையும் குழப்பத்தில் மூழ்கவைக்க
முயற்சிக்கிறார்கள்.
காயல் மக்கள் அந்த அளவிற்கு அலசி ஆராய்ந்துபார்க்கும் அறிவுத்திறனில் பின்தங்கியவர்கள் அல்ல.அல்லாஹ்வின் மார்கத்திற்கு முனையளவு பங்கம் ஏற்படுவதுபோல் தெரிந்தால் அதை தூக்கி எறியும் உண்மையான ஈமானை இறுக்கமாக பெற்றவர்கள் காயல்பதி மக்கள்!
DCW மாசுதுன்ப எதிர்ப்பதில் எல்லா அரசியல் கட்சிகளும் பங்கேற்கத்தான் செய்தது செய்தது,அதை எதிர்ப்பதில் வலிமையுடைய அமைப்பான KEPA விற்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் நாம் இருந்தாலே போதும்,DCW வை எதிர்க்க வேண்டுமென்று ஆகாயத்திலிருந்து விழுந்து வீரியத்துடன் எதிர்ப்பு வலம் வரும் ஒரு சக்தி ஆம் ஆத்மி கட்சி என்று ஒரு கற்பனைகோட்டையை கட்டிக்கொண்டு நம் ஆதரவை பெற தூண்டில் போடுகிறார்கள்!
ஆகவேஅன்பு இஸ்லாமியமக்களே புதுசுக்கும்,பளபளபிர்க்கும் மயங்கிவிட வேண்டாம்.”மின்னுவதெல்லாம் பொன்னல்ல” நம் சிறுபான்மை சமுதாயத்தின் காவல்அணிக்கும், இதுவரை ஏதாவது நம் வாழ்வாதார உரிமைக்காக உதவிகள் செய்வதற்கு உறுதுணையாய் இருந்த அணிக்கும்,மனசாட்சியுடனும் நன்றியுனர்வுடனும் நம் வாக்கை செலுத்துவோமாக
எக்காரணத்தைக் கொண்டும் நம் வாக்கை வீணடித்து விட வேண்டாம்! =நம் வாக்கு வீணடிப்பதற்கு அல்ல=
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!.
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross