செய்தி: டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து KEPA அவசர செயற்குழு கூடியது! அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தைக் கூட்ட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சரியான பாதையில் KEPA posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[04 April 2014] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34119
அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க கூட்டிய KEPA அமைப்புக்கு துஆவுடன் கூடிய வாழ்த்துக்கள். தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளது. இன்ஷா அல்லாஹ், வரும் வெள்ளிக்கிழமைக்குள், நமதூர் அனைத்து ஜமாத்துக்கள், புறநகர், குறிப்பாக, இந்த நச்சு ஆலையினால் பாதிக்கப்படும் அனைவரையும் கூட்டி நல்ல முடிவு எடுங்கள்.
பலரின் கருத்துக்களின் அடிப்படையில், தேர்தல் புறக்கணிப்பு நல்ல தீர்வாக இருக்கலாம். நாட்கள் கடந்தால், தேர்தல் முடியட்டும் முடிவு எடுக்கலாம் என்று நமது தலையில் 'காரமான மிளகாய்' அரைப்பார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவு எடுக்கப்பட்டால், அதில் உறுதியாக இருப்போம். 'மஷூரா' செய்யும் முன், அல்லாஹ்விடம் துஆ செய்து, அவனின் பொருத்தத்தை நாடி முடிவு எடுங்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நம் உயிரோடு விளையாடும் இந்த விஷயத்திலாவது ஒற்றுமை ஏற்படுத்த போதுமானவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross