செய்தி: நகரில் அமிலக் கழிவைக் கலக்கும் டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து KEPA அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தேர்தல் புறக்கணிப்பின் அர்த்தம் புரிந்து கருத்து பதிவு செய்யுங்கள். posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[05 April 2014] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34138
இப்போ நடக்கும் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் இல்லை. இந்த நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 9-10 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். நமது ஊரில் உள்ள வாக்குகள் சுமார் 30 ஆயிரம் மட்டுமே.
நாம் புறக்கணிப்பதால், எதிரி வென்று விடுவார் என்று பூச்சாண்டி காட்ட வேண்டாம். ஒரு ஊரே தேர்தல் புறக்கணிப்பு செய்தால், அது இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கும். அப்படி ஒரு சூழலை எந்த அரசியல் கட்சியோ, அரசாங்கமோ விரும்பாது. அப்படி புறக்கணிப்பு என்று ஊரே முடிவெடுத்தால், அதன் பின்னர் இந்த அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்று பொறுத்திருந்து பாருங்கள்.
இப்போது பழைய சம்பவத்தையும் நினைவு படுத்துகிறேன். நான் இன்றும் ஐக்கிய பேரவைக்கு ஆதரவாளன்தான். ஆனால், 169 சுனாமி தொகுப்பு வீடு திட்ட பிரச்சனையில், பேரவை முதலில் எடுத்த, 2011 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்ற முடிவில் உறுதியாக இருந்திருந்தால், அன்றே அந்த பிரச்சனை முடிந்திருக்கும்.
ஆனால், பேரவை சில காரணங்களுக்காக அந்த முடிவில் உறுதியாக இல்லாமல், தேர்தலுக்கு பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போட்டதன் விளைவு, இன்னும் அந்த பிரச்சனை 'நம் தலை மீது தொங்கும் கத்தி போல தொங்கிக் கொண்டு இருக்கிறது'. 3-4 மாதங்களுக்கு முன்னர் கூட, நம் மாவட்ட ஆட்சியர், நம் நகர்மன்றத்துக்கு இந்த விஷயமாக கடிதம் எழுதினார். இதை குறிப்பிடுவதற்கு காரணம், தேர்தல் முடிந்து விட்டால், நமக்கு 'அல்வா' தான்.
சகோதரர் மீரா சாஹிப் அவர்கள், உலக சரித்திரத்தை தவறாக புரிந்துள்ளார். அதனால் தான் பாலஸ்தீன பிரச்சனையுடன் ஒப்பிட்டுள்ளார். பாலஸ்தீன பிரச்சனையில், 'பெரிய அண்ணன்' அமெரிக்கா நடுநிலையாக இருந்திருந்தாலே, எப்போதோ தீர்வு ஏற்பட்டிருக்கும். இந்த பாலஸ்தீன பிரச்னையை பற்றி மேலும் சிலர் கருத்து பதிந்து, இந்த தலைப்பின் கருவை திருப்பி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
KEPA ஒருங்கிணைப்பில், அனைவரும் எடுக்கும் நல்ல முடிவுக்கு ஆதரவு தெரிவிப்போம். தயவு செய்து, இந்த விஷயத்திலாவது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross