செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: சிறுபான்மை முஸ்லிம்களுக்கு நன்மைகள் செய்தது அதிமுகதான்! கருணாநிதி குடும்ப அரசியல் செய்கிறார்!! காயல்பட்டினத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஒரு முதல்வர் பிரதமர் ஆகிறார்? posted bymackie noohuthambi (chennai)[05 April 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34149
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும். நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள், சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்! இது சிவந்த மண். ஆனால் புரட்சி தலைவியை அப்படி பட்டத்து ராணியாக ஆக்குமா இந்த மண் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாளை நமதே நாற்பதும் நமதே என்ற வீணையை எல்லோரும் இப்போது மீட்டுகிரார்கள். அரசியல் அநாதைகளாகி விட்ட காங்கிரஸ்காரர்கள், கைபர் கணவாய் வழியே வந்த ஆரியர்களுடன் திராவிடர்கள் என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொண்ட கலிங்கத்துப் பரணி பாடியவர்கள், சமூக நீதிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் என்று முழங்கிய பசுமை தாயக நாயகர்கள் கூட்டணி அமைத்து தங்களை சிறுமைப் படுத்திக் கொண்டவர்கள், இந்த பழம் புளிக்கும் என்று எட்டாத கனியை எட்டி உதைத்து விட்டு போனால் போகிறது மன்னிப்போம் என்று இப்போதே மீண்டும் காங்கிரசை ஆதரிக்க ஆசைப் படும் அண்ணாவின் தம்பிகள் - எல்லோரும் சொல்வது "நாங்கள் கை காட்டுபவர்கள்தான் மத்தியில் ஆட்சி அமைப்பார்கள்".
நல்ல வேளை ஜெயலலிதா அவர்கள் நான்தான் அடுத்த பிரதமர் என்று அடித்து சொல்லவில்லை, நாஞ்சில் சம்பத் போன்றவர்களை சொல்ல வைத்திருக்கிறார்கள். கலைஞர் மட்டும் நேரடியாக பதில் சொல்லி விட்டார் "எனது உயரம் எனக்கு தெரியும்". வெட்டி கட்டியவனும் சேலை கட்டியவளும் - அவர்கள் தமிழர்கள் என்றால், இந்த பிரதமர் கனவு கனவாகவே இருக்கும். இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்ததே சடு குடு விளையாட்டில்தான், ஏன் தெரியுமா அடுத்தவன் காலை வாரி விடுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப் படுவது இந்த விளையாட்டில்தான்.
கூட்டிக் கழித்து பார்த்தால், மத்தியில் மதவாத அரசு அமைந்தால் நிச்சயம் அம்மா அவர்களின் கை ஓங்கி நிற்கும்.. மத சார்பற்ற ஆட்சி அமைந்தால் கலைஞரின் கை ஓங்கி நிற்கும்.. ஏழைகள், சிறுபான்மையினர் முகங்கள் எப்போதும்போல் அழுது வீங்கி நிற்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross