அகம் குளிர்ந்தது அன்பு மருமகளே...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (சிங்கப்பூர்.)[06 April 2014] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 34165
முதலில் டாக்டர் பட்டம் பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்...!
சிங்கப்பூர் தாய் மாமனை இன்னும் கமெண்ட்ஸ் ஏரியாவில் காணோம் :) என்று ஒரு சகோதரர் கேட்டிருந்தார். செய்தியை அனுப்பிவிட்டேன். அது வெளி வந்து மூன்று நாட்களாகின்றன. வேலை பளு காரணமாக ஓய்வில்லா நிலை. தாய் மாமனின் ஆசியும் அன்பும் எப்போதும் உண்டு.
மருத்துவம் என்பது தொழில் அல்ல! அது ஓர் உன்னதமான சேவை. தாங்கள் இருவரும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தமையால் கல்லூரியில் இடம் கிடைத்து பயின்ற ஆறு ஆண்டுகள் படிப்பிற்காக பெரிய செலவீனங்கள் வந்திருக்க வாய்ப்பில்லை. எனவே பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் எண்ணத்தை விட மனித நேயத்தை சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கம் உங்கள் மனதில் உட்கொண்டு சேவையாற்ற வேண்டும். அத்துடன் மகத்துவ மிக்க மருத்துவ கலையில் இன்னும் பல படித்தரங்கள் உயர்ந்து இனம்,மதம், மொழி என்கிற வேறுபாடின்றி மனித குலத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும்.
அன்பு மருமகளே! உன் இலட்சியக்கனவு இன்று பலனாகி விட்டது. நம் குடுபத்தின் இரத்த உறவுகள் உன் வளர்ச்சிக்காக தூக்கம் தொலைத்த நாட்கள் பல...உன் தாய்,தந்தையரின் பெயரை பெருமையுடன் காப்பாற்றி விட்டாய். பயிற்சி காலத்தில் பல்வேறு கஷ்டங்களை நீ அனுபவித்திருந்த போதிலும் கண்ணியம் பேணி கடமையை வெல்ல, கனவை நினைவாக்க நீ பட்ட பாட்டினை உன் தாய் மாமன் நன்கு அறிவேன். இனி நனி சிறக்க உன் சேவையைத் துவங்கு, ஏழைகளுக்காக உன் மனம் இரங்கட்டும், இன்பமுற இல்லறத்திலும் நீ வெற்றி பெற அகம் குளிர வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross