முஸ்லிம்களின் மனநிலை posted byS.A.Muhammad Ali (Velli) (Kayalpatnam)[09 April 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34193
நம் சமுதாய மக்கள் தொன்று தொட்டு திராவிட கட்சிகளின் அபிமானிகளாக இருந்து வந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களின் வாக்குகளை அளிப்பதில் தவறியதில்லை.
இன்று உள்ள அரசியல் சூழ்நிலையில் அனைத்து திராவிட கட்சிகளும் சந்தற்பவாதிகளே. தமிழகத்தில் எந்த திராவிட கட்சி அதிகமான சீட்டுகளை பெற்றாலும் மத்தியில் யாருக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதோ அவர்கள் பக்கம் தான் சாய்வார்கள். தங்களின் சுய தேவைகளுக்காக மட்டுமே சிந்திக்க கூடிய திராவிட கட்சிகள் இஸ்லாமியர்களை ஒட்டு வங்கிகளாக மட்டுமே பார்த்து வருகிறார்கள்.
நம் சமுதாய மக்கள் தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுபடாவிட்டாலும் மனதளவில் அவர்கள் ஒதுங்கியே உள்ளார்கள். ஆகையால் மதிமுக, தேமுதிக காயல் நிர்வாகிகளை நாம் அவர்களின் புற செயல்பாடுகளை மட்டும் பார்த்து முடிவு எடுக்க வேண்டாம் .
இதே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பிஜேபியுடன் கூட்டணி வைத்த சமயம் அதன் நிர்வாகிகள் அந்த கட்சியை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் தான் தற்பொழுது இவர்களை பற்றி அதிகம் பேசுகிறார்கள்,. நம் தலைவர்கள் தங்களின் கட்சியை காப்பாற்ற சில சமயங்களில் இது போன்ற முடிவை எடுக்கும் போது மக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
மத்தியில் மதவாதத்திற்கும் ஊழலிற்கும் எதிராக மாற்று சக்தியாக புறப்பட்டு இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்கு அளிக்க நம் மக்கள் தயாராகி விட்டார்கள் காயல்பட்டணம் கலைஞர்பட்டணம் என்ற மாயையில் இருந்து விடுபட்டு இஸ்லாமியர்கள் இனி இளிச்சவாயர்கள் இல்லை என்பதை திராவிட கட்சிகளுக்கு உணர்த்த இந்த தேர்தலில் நம்முடைய வாக்குகளை “துடைப்பம்” சின்னத்தில் அளித்து சமூக போராளி திரு.புஷ்பராயன் அவர்களை வெற்றி பெற செய்வது நம்முடைய கடமை.
நம்மில் சிலர் “துடைப்பம்” சின்னத்திற்கு வாக்களித்தால் ஓட்டை பிரிக்கிறோம் கூரையை பிரிக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். தமிழகத்தை பொருத்த வரையில் அனைத்து திராவிட கட்சிகளும் பிஜேபி யின் அபிமானிகளே. துடைப்பம் வெற்றி பெறாவிட்டாலும் இஸ்லாமியர்களின் வாக்கு திராவிட கட்சிகளிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது என்ற அவப்பெயரை துடைத்தெறியும் என்பது நிச்சயம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross