அபாய அறிகுறி அறிவிப்பு! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[09 April 2014] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34216
இது ஜனநாயக நாடு யாருவேண்டுமானாலும் யாரிடமும் வாக்கு கேட்கலாம்! என்ன வருத்தம் கேட்பவர், கேட்க்கப்படுபவரின் தகுதியையோ,அவரின் கலாச்சாரத்தையோ,அவரின் மார்க்க நம்பிக்கை வாழ்வு முறையையோ கிஞ்சித்தும் கவனிப்பதில்லையே என்பதுதான்!
கேட்பது நமது கடமை அதை கேட்டுவிட்டுத்தான் போவோமே என்ற எழுதபடாத சட்டத்தை அரங்கேற்று கிறார்கள்! அதற்க்கு சில காயலர்களும் இருதலைகொள்ளி எறும்புகளாய் ஏனோதானோவென்று துணைபோகும் போலிவேட நாடகக்காட்சிகளையும் காணமுடிகிறது!
நேற்றுதான் ப .ஜ க வின் தேர்தல் அறிக்கையில்,
அதே அயோத்தியில் அதே இடத்தில ராமர்கோயில் கட்டப்படும்,பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும், காஸ்மீர் மக்களுக்குறிய சலுகைகள் நீக்கப்படும் என்று தைரியமாக சிறுபான்மையராகிய நம் முஸ்லிம் மக்களை முனையளவுகூட ஒரு பொருட்டாக கருதாமல் எங்களுக்கு அடிமையாகத்தான் உங்கள் காலங்களை கழிக்கவேண்டும் என்ற இறுமாப்பு அறிக்கையை தந்திருக்கிறார்கள்!
இப்படிப்பட்ட அறிக்கை வந்த பிறகும் நமூரில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்க வந்திருக்கிறார்கள் என்பதை என்னும் பொழுது,இதயத்தில் ஏதோ ஒரு சுமை அமுக்குவது போன்ற ஒரு உணர்வு,
எத்திசை எதிர்ப்புகள் வந்தாலும் எங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவி அணுவளவும் குறையாமல் கிடைத்திடும் என்ற இறைநம்பிக்கையை இறுக்கமாக இதயத்தில் ஏந்தி வாழும் எங்களை இறைவன் கைவிடமாட்டான்!
இருப்பினும் எனதருமை இஸ்லாமிய சமுதாயமே இப்பொழுது நம் முன்னால் நிற்கும் மிகப்பெரிய அபாயத்திலிருந்து நாம் காக்கப்படவேண்டுமென்றால் தற்போது சிறுபான்மையருக்கு குறிப்பாக முஸ்லிம்களாகிய நமக்கு அடைக்கலமாகவும்,ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் அணிக்கே நம் ஆதரவை தெரிவித்து மதவெறியர் களின் வேட்டைக்கு பலியாகாத புல்லிமான்போல் பறந்தோடி நம்மைநாம் பாதுகாத்துக்கொள்வோமாக்!
இந்த அணிக்குத்தான் வாக்களியுங்கள் என்று அடையாளம் காட்டி பிரச்சாரம் பண்ண விரும்பவில்லை. சிறந்த சிந்தனை சிற்ப்பிகளாகிய காயல்பதி மக்களுக்குத்தெரியும் எந்த அணியை இந்த சுல்தான் சிலேடையாய் சொல்கிறான் என்று!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross