முன்பு போல் காயல்பட்டினத்தில் தி மு க விற்கு ஆதரவு கிடையாது...! அனிதா என்று தனி மனிதருக்கு மட்டும் தான் நகர் மக்கள் ஆதரவு..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[14 April 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34298
திமுக செய்த சிறு சிறு தவறுகளை பொருட்படுத்த வேண்டாம் CP
திமுக செய்த சிறு சிறு தவறு என்று எதை கூறுகிறீர்கள்..?
கடந்த 2002 ஆம் ஆண்டு மக்களவையில் பி ஜ பி உறுப்பினர் ஒருவர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு திரட்டினாரே அப்போது அந்த பொது சிவில் சட்டத்திற்கு தி மு க தனது ஆதரவை அளித்து கையப்பமிட்டதே அதையா நீங்கள் சிறு சிறு தவறு என்று மனசாட்சியே இல்லாமல் கூறுகிறீர்கள்...!
சபாஷ்... சபாஷ்... தி மு க வின் மீதுள்ள பற்று ஒருவனை எதை எல்லாம் மறக்க செய்கிறது என்பது இது ஒரு உதாரணம்..!
இன்று முஸ்லீம் ஓட்டுகளை பெற்று பிறகு பி ஜ பி க்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்று என்ன உத்திரவாதம் முஸ்லீம் லீக் - ம ம க விடம் கொடுத்துள்ளது..? இவர்களின் அணைத்து கடந்த கால செயல்பாடுகளை எல்லாம் அறிந்து தான் தற்போது ஆம் ஆத்மிக்கு நகரில் 500 நபர்களுக்கும் மேல் மக்கள் வாக்களிக்க உள்ளார்கள்...
முஸ்லீம் மக்களிடையில் பி ஜ பி ஆட்சிக்கு வந்திரும், பி ஜ பி ஆட்சிக்கு வந்திரும், பி ஜ பி ஆட்சிக்கு வந்திரும் என்று சொல்லி சொல்லியே இசுலாமிய மக்களை அடிமை படுத்தி பல ஆண்டுகள் பதவி சுகம் பெற்று வந்த இந்த தி மு க இன்று தமிழகத்தில் ஆம் ஆத்மியின் புதிய எழுச்சி - விழிப்புணர்வை தன்னிடம் அடிமை பட்டு கிடக்கும் முஸ்லீம் மக்கள் மீது பரவி விடாமல் என்ன என்ன பொய் பித்தலாட்டம் செய்து பரப்புரை செய்ய முடியுமோ அது அத்தனையும் தற்போது தி மு க செய்து வருகிறது.. இதுவே உண்மை..
இத்தேர்தலில் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதனை வருகிற 24 ஆம் தேதி வாக்கு சாவடியில் தூத்துக்குடி தொகுதி மக்கள் குறிப்பாக காயல்பட்டினம் நகர மக்கள் பதிவு செய்வார்கள்..
காயல்பட்டினத்தில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகி 25 நாட்களே ஆகிறது - நகரில் புதிய வாக்களர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
தேர்தல் முடிவுக்கு பின் தூத்துக்குடி தொகுதியில் வாக்கு வித்தியாசத்தை பார்த்து தெளிவு பெற்று கொள்ளுங்கள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross