Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:35:22 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13482
#KOTW13482
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 13, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தை முன்னிறுத்தி ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள பிரசுரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3563 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.



இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு கோரும் வகையில், காயல்பட்டினத்தை முன்னிறுத்தி - ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பின்வருமாறு பிரசுரம் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது:-





ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [13 April 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 34282

இது நகராட்சி தேர்தல் அல்ல உள்ளூர் பிரசினைகளைப் பற்றி பேசுவதற்கு. நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல். நாட்டில் உள்ள பிரச்சனைகளை பற்றி சிந்திப்போம். மதவாதத்தை முற்றிலுமாக வேரறுப்போம்..

பொது எதிரியை வீழ்த்துவதற்கு முஸ்லிம் சமுதாயம் 100% மும் ஓரணியில் திரளவேண்டிய நேரமிது. அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் ஆதரிக்கும் பலம் வாய்ந்த திமுக அணிக்கே நமது வாக்குகள் செல்லவேண்டும். திமுக செய்த சிறுசிறு தவறுகளை பொருட்படுத்த வேண்டாம் .

இஸ்லாமியர்களின் பொன்னான வாக்குகளை வீணடித்துவிட வேண்டாம் . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாமா நீங்கள் நல்லவரா........ கெட்டவரா.......?
posted by s.s.md meerasahib (TVM) [13 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34283

மாமா புஷ்பராயன் அவர்களே....... நீங்கள் நல்லவர்தான். ஆனால் சிறுபான்மையான மக்களின் பல பரீச்சை நடக்கும் இந்த நல்ல நேரத்தில் நீங்கள் நின்று ஓட்டுகளை பிரித்து உங்களின்+எங்களின் (நம்முடைய) எதிரிகளை வெற்றி பெற செய்வது எந்த வகையில் நியாயம் மாமா.

அதுவும் காயல்பட்டினத்தில் அவர்களின் இப்போதைய தேவையை சுட்டிக்காட்டி ஓட்டை பிரிப்பது நியாயம் இல்லை மாமா. எங்களுக்கு இப்பொழு து எங்களின் சுயநலத்தை விட மார்க்க நலம்தான் மேலானது. மார்க்கத்தை விட்டு மனிதனாக வாழ ஆசை இல்லை.

நரேந்திர மோடி வந்தால் எங்களின் சரீயத்துக்கு வேட்டு வைக்கப்படும். அப்படி வேட்டு வைத்தால்......... நாங்கள் முஸ்லிமாக இந்த புவியில் நடமாடும் பிணமாக வாழ்வதில் அர்த்தம் இல்லை மாமா. புரிந்து இருப்பீர்கள். அப்படி ஒரு நிலை நரேந்திர மோடி உருவாக்கினால் எங்களுக்கு ஜிஹாதை தவிர வேறு ஒரு வழி இல்லை மாமா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [13 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34290

அஸ்ஸலாமு அலைக்கும் ,

பொது எதிரியை என்ற பதம் இந்த இடத்தில் மோடியையும் - பிஜேபி மற்றும் அதனை சார்ந்த கூட்டணீகளையும் குறிக்கும்.

அது சமையம் மற்ற கட்சிகளான ஆம் ஆத்மி , கம்யுனிஸ்ட் , ஆ. தி . மு . க . போன்றவைகளுக்கு நம் ஓட்டினை போடு சிதறடித்து விடகூடாது.

பல மாதத்துக்கு முன்பு சில அரசியல் சம்பந்தமாக விமர்சிக்கும் போது இந்த வார்தையை பயன்படுதியது, இன்று நமக்கு சூழலுக்கு தகுந்த கலை சொல்லாக அமைந்து விட்டது நம் மக்கள் இந்த பதத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் .

இந்த முறை தி . மு .க கூட்டணிக்கு நம் வாக்கினை வழங்குவது நமக்கு பயன் அளிக்கும் நம் பொது எதிரியை வீழ்த்துவதற்கும் அவர்களின் பலத்தை குறைபதட்கும் நமக்கு இது ஒரு சிறந்த வழியாக அமையும் .

இந்த சமுதாயம் மட்டும் ஒற்றுமையாக இருந்து தங்கள் பொது எதிரியை ( மோடி - பிஜேபி யை ) வீழ்த்த வருங்கால எதிரிகலான அ . இ . அ . தி . மு . க போன்ற கட்சிகளுக்கு நம் வாக்கை வழங்காமல்.

தி . மு . க கூட்டனிக்கு நம் வாக்கினை அளிக்க வேண்டும் தமிழகத்தை பொறுத்தவரை நமக்கு இந்த சூழலுக்கு இதுதான் சிறந்த முடிவாக இருக்கும் நிறைய மார்க்க வல்லுனர்கள் , பொதுவான சிந்தனையாளர்கள் , நடுநிலை அரசியல் நிபுணர்கள் போன்ற நடுநிலையானவர்களின் கருத்தாக இந்த நிலை தான் உள்ளது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [13 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34292

முக்கிய பிரசுவதில் ஒன்றுதான், சட்டமன்ற தேர்தலுக்கு செல்லும். ஓட்டபிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்அடங்கி தொகுதி இந்த பாராளுமன்ற தேர்தல். தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் ஆக வேனும் என்றல் மத்தியில் ஆச்சி மாட்டம் வேனும். ஊழல்க்கு காரணமானவர்களுக்கு நீதி மன்றம் மூலம் தண்டனை கொடுக்க முன்வரவேண்டும். வரும் தேர்தல் மக்கள் விரோத ஆட்சியை அகட்டி மக்கள் ஆட்சி கொண்டு வர வேண்டும். வாக்குகள் சிதறாமல் அ இ அ தி மு க வேட்பாளர்க்கு வாக்களியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Rilwan (TX) [13 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34294

திமுக செய்தது சிறு சிறு தவறுகள் ? திமுக ஆட்ச்சியில் இருக்கும்போது முஸ்லிம்களுக்கு நல்லது செய்துள்ளது ?

கருணாநிதி முஸ்லிம்களை எப்படி காப்பாற்றுவார் என்று விளக்கம் கூறுங்கள் . கருணாநிதி விரித்திருக்கும் வலையில் விட்டில் பூச்சிகள் மாதிரி விழுகிறீர்கள் ... திரும்ப திரும்ப முதுகில் குத்தியுள்ளார் கருணாநிதி ..

டி சீ டபுல்யோ பிரச்சினையை பேரூராட்சி மன்றத்தில் பேசி தீர்த்து விடுவீர்களா ? அவ்வளவு ஈசியா ?

புஷ்பராயனின் பொதுநல வாழ்க்கையை பற்றி தெரியாமல் பேசுகிறீர்கள் . இவர் சார்ந்துள்ள உதயகுமாரின் இயக்கம் பார்ப்பானிய அதிகார வர்க்கத்தை வெளிப்படையாக எதிர்க்கும் இயக்கம் .

பாராளுமன்றத்தில் உங்களுக்காக போராளி போக வேண்டுமா இல்லை சும்மா டெல்லி சுற்றி பார்க்க ஒருவரை அனுப்ப வேண்டுமா .

புஷ்பராயன் ஒரு சுதந்திரமான சிந்தனை படைத்த போராளி ... கேஜரிவால் நினைத்தாலும் புஷ்பராயனை விற்க முடியாது

ஆனால் ஜெகனுக்கென்று சுதந்திர சிந்தனை கிடையாது . கருணாநிதி யாரிடம் விலை போக சொன்னாலும் விலை போவார்.

முஸ்லிம்கள் திமுகாவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் .

மக்களுக்காக போராடக்கூரிய ஒரவர் தான் டெல்லிக்கு போக வேண்டும் - சப்பை கட்டுகள் அல்ல .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Rilwan (TX) [13 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34295

சகோதரர் பி எஸ் Abdul காதர அவர்களுக்கு

yen... ஆதிமுகாவிர்க்கு என மறைமுகமாக கேர்ப்பதை விட்டு பீஜெபிக்கு ஒட்டு போட என வெளிப்படையாக இருக்க வேண்டியது thane ?

இந்த தேர்தலில் பீஜெபியும் ஆதிமுகாவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்பதுதான் உண்மை .

சகோதரரே ... செய்திகளை அலசும் பழக்கம் கொள்ளுங்கள் ... சோ பிஜேபி ஆதிமுக ஒப்பந்தத்தை வெளிப்படயாக சொல்லிவிட்டார் ...

பிஜேபி ஆதரவுடன் பசு வதை , மதமாற்ற தடை சட்டம் என முன்பு நடத்தியதை திரும்பவும் கொண்டு வருவார் ஜெயலலிதா அய்யர் ,

ஒன்று ... உங்கள் ஆதரவு பீஜெபிக்கு என வெளிப்படையாக கூறுங்கள் ,,, illai, உங்கள் தவறை உணருங்கள் .

திராவிடர் அல்லாத ஜெயாவை புகுத்தி திராவிட அரசியலை அழிக்கும் திட்டத்தோடு சோ போன்ற விஷ கிருமிகளால் புகுத்தப்பட்ட சுயநலவாதியே ஜெயலலிதா ..

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Rilwan (TX) [13 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34297

We don't want Periyasami's son, Geetha Jeevan's brother to represent us. Just as his father and siistet, Jegan will NOT DO anything for the constituency.

There is no compromise on opposing Jegan's candidacy . We simply don't want another corrupt representative. We don't want slam dunk representative.

We want an independent thinking and a fighter in the parliament .

No religious party or group has any moral ground whatsoever to expect us to relent on this. No reason can justify voting for Jegan.

A very wrong candidate - in any domain!!!

Our unabated opposition to Jegan is incontestable!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. முன்பு போல் காயல்பட்டினத்தில் தி மு க விற்கு ஆதரவு கிடையாது...! அனிதா என்று தனி மனிதருக்கு மட்டும் தான் நகர் மக்கள் ஆதரவு..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [14 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34298

திமுக செய்த சிறு சிறு தவறுகளை பொருட்படுத்த வேண்டாம் CP

திமுக செய்த சிறு சிறு தவறு என்று எதை கூறுகிறீர்கள்..?

கடந்த 2002 ஆம் ஆண்டு மக்களவையில் பி ஜ பி உறுப்பினர் ஒருவர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு திரட்டினாரே அப்போது அந்த பொது சிவில் சட்டத்திற்கு தி மு க தனது ஆதரவை அளித்து கையப்பமிட்டதே அதையா நீங்கள் சிறு சிறு தவறு என்று மனசாட்சியே இல்லாமல் கூறுகிறீர்கள்...!

சபாஷ்... சபாஷ்... தி மு க வின் மீதுள்ள பற்று ஒருவனை எதை எல்லாம் மறக்க செய்கிறது என்பது இது ஒரு உதாரணம்..!

இன்று முஸ்லீம் ஓட்டுகளை பெற்று பிறகு பி ஜ பி க்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்று என்ன உத்திரவாதம் முஸ்லீம் லீக் - ம ம க விடம் கொடுத்துள்ளது..? இவர்களின் அணைத்து கடந்த கால செயல்பாடுகளை எல்லாம் அறிந்து தான் தற்போது ஆம் ஆத்மிக்கு நகரில் 500 நபர்களுக்கும் மேல் மக்கள் வாக்களிக்க உள்ளார்கள்...

முஸ்லீம் மக்களிடையில் பி ஜ பி ஆட்சிக்கு வந்திரும், பி ஜ பி ஆட்சிக்கு வந்திரும், பி ஜ பி ஆட்சிக்கு வந்திரும் என்று சொல்லி சொல்லியே இசுலாமிய மக்களை அடிமை படுத்தி பல ஆண்டுகள் பதவி சுகம் பெற்று வந்த இந்த தி மு க இன்று தமிழகத்தில் ஆம் ஆத்மியின் புதிய எழுச்சி - விழிப்புணர்வை தன்னிடம் அடிமை பட்டு கிடக்கும் முஸ்லீம் மக்கள் மீது பரவி விடாமல் என்ன என்ன பொய் பித்தலாட்டம் செய்து பரப்புரை செய்ய முடியுமோ அது அத்தனையும் தற்போது தி மு க செய்து வருகிறது.. இதுவே உண்மை..

இத்தேர்தலில் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதனை வருகிற 24 ஆம் தேதி வாக்கு சாவடியில் தூத்துக்குடி தொகுதி மக்கள் குறிப்பாக காயல்பட்டினம் நகர மக்கள் பதிவு செய்வார்கள்..

காயல்பட்டினத்தில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகி 25 நாட்களே ஆகிறது - நகரில் புதிய வாக்களர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

தேர்தல் முடிவுக்கு பின் தூத்துக்குடி தொகுதியில் வாக்கு வித்தியாசத்தை பார்த்து தெளிவு பெற்று கொள்ளுங்கள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. பயம் மற்றும் வியுகத்திர்க்கு முற்றுபுள்ளி வைத்தி ஓர் அணியில் நின்றால் வெற்றி ஆம் ஆத்மிக்கே!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [14 April 2014]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34299

அஸ்ஸலாமு அழைக்கும்.

பயந்ததும் வியூகத்தினால் வேறு கதி இல்லை என்று புலம்பி ஊழலுக்கும் மதவாதிகளுக்கும் சப்பகட்டு கட்டி நமது சுயநலத்தை விலைகொடுத்தது போதும். IUML தற்போதைய வேட்பாளர் மதிப்பிற்குரிய சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களாலேயே அர்களின் IUML தேசிய தலைவர் மூலம் நமது அபூபக்கர் காக்கா அவர்களின் முயற்சியில் [D.M.K. மூலம் அல்ல ] எடுக்கப்பட்ட தொடர்வண்டி நிலையபநிகளின் நிலைமைகளை மற்றும் நமது சமுதாய பிரட்சனைகளை பாராளுமன்றத்தில் பேச D.M.K. கொரடா அனுமதி இல்லாததால் பேசமுடியவில்லை.இது தான் D.M.K. நமக்கு கொடுக்ககூடிய மதிப்பு.ஒரு வேலை வியூகங்கள் வெற்றிபெற்று மதவாதிகள் வந்தால் மட்டும் D.M.K , A.D.M.K வந்து நம்மை காபற்றபோகிரார்களா. நம்பி ஏம்பாந்தது போதும்.

ஒரே அணியில் அனைவர்களும் நின்று NOTA விற்கு பதிலாக இம்முறை ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் நமது தொகுதி நிச்சியம் ஓர் அணியில் வாக்களித்தால் வெற்றி பெறுவது உறுதி.

அடுத்தவர்களை எதிர்பார்ப்பது நம்மிடம் ஓர் பொதுவான அமீர் தலைவர் இல்லாமல் பிரிந்து கடப்பதே காரணம். அதை பேசினால் சாத்தியமில்லை என்பதே பதிலாக தந்து பலத்தை வீணடிக்கிறோம்.

உண்மையில் நமது சமுதாயம் குறைந்தது நமது ஊரில் ஓர் அணி ஏற்படுத்த முயலுங்கள். பலத்தை காட்டுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. சிந்திப்பீர் செயல்படுவீர்
posted by Salai Sheikh Saleem (Dubai) [14 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34302

அன்பான சகோதரர் களே,

நான் ஒரு திமுக காரன் இருந்தாலும், இன்றைக்கும் கூட DCW விஷயமாக தேர்தல் புறக்கணிப்பு என்றால் முதல் ஆளாக நிர்ப்பது நான் தான். அனால் ஒரு தனி மனிதன் அதுவும் தேர்தலில் டெபாசிட் கிடைக்குமா இல்லையா என்னும் விளிம்பில் நிற்கும் ஒரு மனிதன் தனக்கு ஒட்டு விழ வேண்டும் என்பதற்காக எதையும் சொல்லுவார் (உண்மையில் அவர் ஒரு போராளி அது இது என்பதெல்லாம் இருக்கட்டும்) அவரால் அந்த தனி மனிதனால் என்ன செய்ய முடியும் ? அப்படியானால் இது TRIAL AND ERROR முறையில் இன்னுமொரு ஐந்து ஆண்டுகளை வீனடிக்கப்போகிரீர்களா ??? DCW மற்றும் கேன்சர் காரணிகள் அறிதல் போன்ற இயக்கங்களை நீங்கள் எல்லாரும் இணையதளைத்தில் எழுதிக்கொண்டும் பேசிகொண்டிருந்த சமயத்தில் ஊரில் என் பொன்னான நேரங்களை நமது சமுதாய நலன் கருதி செலவழித்தவன்.

ஊரில் சிலருக்கு தி மு க வெறுப்பு கண்களை திரை இடுகிறது ஊரில் எது நடந்தாலும் அதை தி மு க அனுதாபிகள் என்று ஏளனமாக எடுத்துக்கொள்ள தோனுகிறது. ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் தெளிவா அரசியல் தெரிஞ்சு இருக்காங்க. இணையதளத்தில் கருத்து பதிபவர்கள் அதிகம் பேர் வெளிநாடுகளில் வசிப்பதால் இங்கே உள்ள அரசியல் தகிடுதத்தம் தெரிய வாய்ப்பில்லை.

எல்லாவற்றையும் விட மேலாக, இந்த தேர்தல் மிக முக்கியமாக மத சார்பின்மையை நிலை நட்ட வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இதில் நமது ஓட்டுக்களை அவன் அதை சொல்லுகிறான் இவன் இதை சொல்லுகிறான் என்று வீணாக எதையும் நம்பி உங்கள் வாக்குகளை சீரழித்து விடாதீர்கள். உங்கள் ஓட்டுக்களை தி மு க தவிர மற்ற கட்சிகளுக்கு வாக்களித்து ஒரு பிணம் தின்னி பரதேசிக்கு மகுடம் சூட்டி நம்மை நாமே சீரழிக்க வேண்டாமே ???? கருணாநிதி கலிமா சொல்லிய இஸ்லாமியனும் இல்லை திமுக முஸ்லீம் லீக்கும் இல்லை, அவர்கள் எல்லா மதத்தினரையும் சமமாக மதிப்பவர்கள். சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தட்டிக்கேட்பவர்கள். இந்த அடிப்படையில் அவர்கள் நமக்கு கண்டிப்பாக தீங்கு விளைக்க மாட்டார்கள் என்றே நம்புவோம். அதுதான் உண்மையும் கூட.

தினத்தந்தி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மதுரை ஆதீனம் "அம்மா மத வாதத்தை முன் வைக்கும் பி ஜ பி யை ஏன் விமர்சிக்க வில்லை" என்று கேட்டதற்கு சூசகமாக ரோடு போட்டு விட்டார், தேர்தல் முடிவிர்க்குப்பின் உங்களுக்கே அது தெரிய வரும் என்று தீர்க்கமாக. எனவே அதிமுக விற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு இஸ்லாமியனின் வாக்கும் அது நேரடியாக பி ஜே பி க்கு தான் கண்டிப்பாக போய் சேருகிறது எனபதை தயவு செய்து உங்கள் உள் மனதில் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.

திரும்பவும் நீங்கள் கேட்பீர்கள் பி ஜே பி கூட்டணி என்று . அது வாஜ்பாய் இருந்த பி ஜ பி , தி மு க விற்கு தந்த வாக்குறுதிகளின் அடிப்படையில். அது தவறு என்று இவர்களின் நடத்தைகளால் என்று தெரிந்ததோ அன்றே தன தவறுக்கு "தங்க தாம்பாளத்தில் விழுந்த கீறல் " என்று நமது சமூகத்தை திருப்பியும் சேர்த்துகொண்ட பண்பு எந்த அரசியல் வாதியிடம் இருக்கிறது சொல்லுங்கள் ???

தனி மரம் என்றும் தோப்பாகாது !!!!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. நான் புது கருத்தாளரா!!!
posted by mohideen abdul kader (ABUDHABI) [14 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34311

அட்மின் அவர்களே.

நான் பதிந்த முன் கருத்தில் என்ன தவறு உள்ளது. தயவு சித்து எனது E MAIL க்கு பதில் தாருங்கள். இல்லை எனில் பதிவு செய்யுங்கள்.mohideen05rediffmail.com

இதற்காக நேரம் ஒதுக்கி அனுப்பும் கருத்துக்கு சுதந்திரமில்லை என்றால் தங்கள் மனசாட்சியடம் கேட்டுகொள்ளுங்கள். IUML ஐ குறிப்பிட்டது தவறா? ஓர் அணியில் திரளுங்கள் என்பது தவறா?எதில் தவறு? காத்திருக்கிறேன் தங்கள் பதிலுக்கு.

முகியதீன் அப்துல் காதர்,
அபுதாபி.

Moderator: தங்களது முந்தைய கருத்தில், மின்னஞ்சல் முகவரி, mohideen@rediffmail.com என்பதற்கு hideen05@rediffmail.com என எழுத்துப் பிழையுடன் தங்களால் அனுப்பப்பட்டதால், புது கருத்தாளர் என காரணம் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது. அது தற்போது திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்களை அனுப்புகையில், மின்னஞ்சல் முகவரியைக் கவனமாகப் பதிவு செய்திட கருத்தாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [14 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34345

"ஊழல்க்கு காரணமானவர்களுக்கு நீதி மன்றம் மூலம் தண்டனை கொடுக்க முன்வரவேண்டும். வரும் தேர்தல் மக்கள் விரோத ஆட்சியை அகட்டி மக்கள் ஆட்சி கொண்டு வர வேண்டும்". (C & P )

தம்பி PS அப்துல் காதர், உங்களையும் அறியாமல், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு, சிறை தண்டனை தான் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Rilwan (TX) [14 April 2014]
IP: 198.*.*.* United States | Comment Reference Number: 34348

Brother Saleem

You say we can't take "trial & error", but we say we can't "repeat the error".

There is miles between our positions.

We don't hate DMK and to make the record straight, I come from a family that was ordained DMK supporters. My grand-father spent his most of his youthful life for the growth of DMK. Every DMK slave (none of the principled DMK members remain with the party today, everyone else today are principally slaves to their mental blocks)

My grand-father never thought us how to use politics to make economic mileage, however, he has spoken to us about the political principles of CN Annadurai.

Karunanithi before 1985 is different than Karunanithi today. He is self consumed with his family woes and he has gone beyond unimaginable extend to ensure the DMK remain his family property. We are rather disgusted in the way DMK positioning itself in today's politics.

Today's DMK remains as Drivida Munnetra Kazhagam only on papers. Rather, it is Dirukkuvalai Mu Ka Private Limited. if at all, rightly to describe, it is Dirudargal Munnetra Kazhagam.

What will karunanithi do for muslims? He will write Murasali article until BJP gives him his share of the carrots. He will write letters to New Delhi, just as Jeya does, in the era of internet. He may even show-off a three hour hunger strike.

Sir - please remember, this same Karunanithi objected to the inclusion of his MP becoming signatory to a letter written by eminent personalities to the US government to refuse visa to Modi.

This same Karunanithi gave good certificate to Modi as a great able leader of Gujarath in an interview.

I don't believe a single word of Karunanithi.

Before you brushing aside Mr. Pushparayan, do background check on Pushparayan before making your own conclusions.

In the same effect, make background check on Mr. Jegan.

The way you ruling out AAP as a loosing party is no different than how Mrs. Sheila Dixit and rest of Congress Neta's ruled them out and you know the rest was a history!!!

We can't make a Tahrir Square or Maidhaan, but we can be stead fast in our principles. We say no to CORRUPTION!!! We say no to LIERS!! We say thugs to GET OFF from politics!!

I don't know about you - We WILL NOT REPEAT THE MISTAKE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved