அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!
டிஎன்டிஜே யின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (12.04.14) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநிலத் தலைமையகத்தில் கூடியது.
இதில் அதிமுகவிற்க அளித்த ஆதரவை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்றது திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் முடிவு பத்திரிக்கையாளர்களிடம் விளக்கப்பட்டது.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவைத் திரும்பப் பெற்றதற்கான காரணம் அச்செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.
எல்லா புகழும் வல்ல நாயன் ஒருவனுக்கே ....
அவனது முடிவே இறுதியானது உறுதியானது .... இன்ஷா அல்லாஹு . .நமது இஸ்லாமிய சமூதாய மக்கள் அனைவரும் ஓன்று இணைந்து ஒரு அணியாக அணி வகுத்தால் ..
எந்த சத்தியாலும் நம்மை மீறி அவர்கள் வென்று விட முடியாது .... அல்லாஹு போதுமானவன் ....
2. Re:... posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[12 April 2014] IP: 113.*.*.* China | Comment Reference Number: 34253
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு. மமக ஆதரவு தெரிவிப்பதால் திமுக அணிக்கு ஆதரவு அளிக்க தயங்கக்கூடாது. மேலும் தாமதிக்காமல் , திமுக கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இம்முறை முஸ்லிம்களின் ஆதரவு 100% மும் ஒரே அணிக்கு விழவேண்டும். அப்போது தெரியும் அதன் தாக்கம்.
துடைப்பத்தை கையில் எடுக்கும் அறிவுஜீவிகளுக்கும் இந்த அறிவுரை பொருந்தும்.
சமுதாயத்தின் நலனே நமக்குள் எப்போதும் மேலோங்கி இருக்கவேண்டும்.
4. Vote for DMK posted byA.M.Seyed Ahmed (Jeddah)[12 April 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34256
அருமையான முடிவு ....சகோதரர் PJ அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....இதே போல் மற்றகட்சிகளில் இருபவர்களும் அவர்கள் கட்சியிலேயே இருந்துகொண்டு ஓட்டை DMK க்கு போட்டு விடுங்கள், பொது எதிரியை வீழ்த்தி விடலாம்...
சகோதரர் PJ அவர்களே ... நீங்கள் விஸ்வரூபம் படபிரச்சனையை எப்படி சந்தித்தீர்களோ அதை மாதிரி 25 இஸ்லாமிய அமைப்புகளும் கருணாநிதி அவர்களை சந்தித்து நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஓட்டளிப்போம் ஆனால் நீங்கள் எலேச்சனுக்கு அப்புறம் BJP யை ஆதரிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் எழுத்துமூலம் தரவேண்டும் என்று கேட்டு தந்தால் வாக்கு அளிக்கலாம், "முத்தமிழ் வித்தகர்" நமக்கு துரோகம் செய்தால் "முத்தமிழையும் வித்தவர்" நீங்கள் என்று கூறி இந்த தேர்தலோடு ஊத்தி மூடி விடலாம் ....
PJ அவர்களே - அப்படி செய்யாமல் வருகிற 14 தேதி உங்கள் தொகுதிகளில் யார் நமக்கு நன்மை செய்வாரோ அவருக்கு வாக்கு அளியுங்கள் என்று தந்திரமாக நீங்கள் தப்ப நினைத்தால் மீண்டும் உங்களை அறியாமல் BJP யை ஆதரிதுவிடுவீர்கள் , கவனம் தேவை.....
ஆரிய சூழ்ச்சியை பாருங்கள் நடிகை சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்டவன், வாயினால் பம்பரம் விடுபவன் , பம்பரத்தை அடுத்தவன் மேலில் விடுபவன் எல்லாத்தையும் ஒன்று சேர்த்துவிட்டான் - இனி ஓட்டு பிரியும் ஈசியாக வெல்லலாம் என்று அவனது ஆரிய தந்திரம்.......நீங்களும் சூழ்ச்சி செய்யுங்கள் சமுதாய நன்மைக்காக...........
ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடலாம், ஆனால் இப்போது போட்டால் ஜெயிப்பது கடினம் அதனால் ஓட்டு சிதறிவிடும் - பொது எதிரி வென்றுவிடுவான்..
"தகப்பன் சொன்னதுஎல்லாம் சரிஎன்று நாம் உணரும் பொது, நமக்கு ஒரு மகன் வருகிறான் நீங்கள் சொல்வதெல்லாம் தவறுஎன்று"
Life rotates, let us go with the positive approach.....
6. Re:...ADMIT MISTAKES posted bymackie noohuthambi (chennai)[12 April 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34259
தவறான முடிவுகள் எடுப்பதில் தவறில்லை. ஆனால் அது தவறு என்று உணர்ந்த பிறகு, உள்ளம் உறுத்தும் போது, ஈகோ பார்க்காமல் அதை திருத்திக் கொள்ளும் மனோ பக்குவம் - தான் செய்தது தவறுதான் என்று சமுதாயத்தின் முன்னே துணிந்து சொல்லக் கூடிய தைரியம் அந்த மனப் பக்குவத்தை அல்லாஹ் நம் எல்லோருக்கும் தந்தருள்வானாக.
இப்போதுள்ள அரசியல் சூழலில் நாம் திமுகவை தவிர யாரை ஆதரித்து வாக்களித்தாலும் அது பீஜெபீக்கு ஆதரவான வாக்காகவே இருக்கும். மாறாக காங்கிரசுக்கு வாக்களிக்கலாம். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். அது கோணல் மாணலாக இருந்தாலும் திருத்தி வரையலாம். ஆனால் சுவரையே இடித்து தரை மட்டமாக்கி விட்டால்..
நமது நாடு மதசார்பற்ற நாடு. ஊழல்கள் புரையோடிப் போய் இருப்பது உண்மைதான். அதற்கு நாமும் உடந்தைதான். IF YOU CANNOT SOLVE A PROBLEM, THEN YOU ARE PART OF THAT PROBLEM என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.அதை சரி செய்ய முயற்சிகள் செய்வோம். ஆனால் சின்ன நெருப்புக்கு பயந்து பெரிய நெருப்பில் விழலாமா - மூட்டை பூச்சியை ஒழிக்கிறேன் என்று சொல்லி வீட்டையே தீ வைத்துக் கொளுத்தலாமா. மத வெறியர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் ஒரு வேளை ஊழல் ஒழியலாம். அதற்குள் முஸ்லிம்களே ஒழியலாம். நாடு பல இரத்தக் களரிகளை சந்தித்து இருக்கிறது. குஜராத் கலவரம் முசாபார் நகர் கலவரம் - பாபர் மசூதி இடிப்பின்போது நடந்த கலவரம்.இவைகளை நினைத்து பார்த்து, நாம் சூடுபட்ட பூனைகள். மறந்தும் அடுப்படிக்கு போய் விடக்கூடாது.
பீஜே அவர்களுக்கு தொண்டர் கூட்டம் உண்டு. அவர் சரியாக சொன்னாலும் தப்பாக சொன்னாலும் அதை அப்படியே ஏற்று நடைமுறைப் படுத்த துடிக்கும் ஒரு இளைஞர்படை அவரிடம்.உண்டு. அந்த உண்மையை மறைக்க முடியாது.
உங்கள் மீளாய்வுக்கு நன்றி. நல்லதொரு மாற்று முடிவை அறிவியுங்கள்.இந்த சமுதாயம் நன்றியுடன் உங்களை நினைத்துப் பார்க்கும்.
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
7. Re:... posted byMAC.Mujahith (Mumbai)[12 April 2014] IP: 14.*.*.* India | Comment Reference Number: 34260
TNTJ வினர் மிக தாமதமாக உணர்ந்து கொண்டு செயல்பட்டாலும் இருதியில் ADMK விலிருந்து ஆதரவு வாபஸ் என்ற செய்தி இன்று வெளியிட்டது வாழ்த்துக்குரியது மற்றும் பாராட்ட தகுந்தது..." இது அல்லாஹ் வின் நாட்டத்தின் விதி..." அவன் நாட்டத்தை மீறி ஒரு கொம்பனும் செயல் பட முடியவே முடியாது..." இது அறிவுரை அல்ல..இறைவனின் உறுதியான கட்டளை..."
9. Re:... posted byahamed mustafa (Dubai)[12 April 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34263
Welcome Move. Appreciated. Bro. Nuski, I don't think Annan is for money. Pretty much sure PJ is not for money as you think. even at dying situations he is one individual who rejected help from all angles..
10. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[13 April 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34264
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அ.இ அ தி மு க பாராளுமன்ற தேர்தலில் அளித்துவந்த ஆதரவு வாபஸ் என்ற செய்தி மகிழ்ச்சி தருகிறது. கடந்த 2004 இல் இதுபோண்ட தேர்தலில் ஆதரவு கொடுத்ததால் போட்டியிட்ட அனைத்து தொகுதியில் அ தி மு க ஆளும் கட்சியாக இருந்தே தோல்வி கண்டது.
அரசியல் நிலை தெரியாமல் ஆதாயம் தோடும் எதிர்பார்ப்பு கால தாமதமே, தலைமை நிலை ஏமாட்டம் வாபச்க்கு அடித்தளம். TNTJ வாபஸ் அதிமுக வெற்றி சுலோபம்.
11. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[13 April 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34265
TNTJ ., அதிமுக விற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ், மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2004 தேர்தலில் ஆளும் அ தி மு க TNTJ வோடு கூட்டணி வைத்தால்தான் தமிழ்நாடே 40 தொகுதியில் படுதோல்வி அடைந்தது.
தேர்தலுக்கு முன் ஆதரவு வாபஸ் பெற்றதால் 40 தொகுதில் வென்று மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசாக அமையும்.
TNTJ எதிர்பார்ப்பு அம்மாவிடம் தாமதம் ஆனதால் எடுபடவில்லை
12. கடவுளே......... வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார். இது எப்படி!!!? posted bys.s.md meerasahib (TVM)[13 April 2014] IP: 27.*.*.* India | Comment Reference Number: 34267
இந்த நிலை தொடர்ந்தால் அவர்களின் தம்பிமார்களுக்கு இடையிலும் வேஷம் கலைந்துவிடும் என்ற ஒரு தொலை நோக்குடன்தான் பின் மாறி இருக்கிறார். சொன்னது எல்லாம் உண்மையும் இல்லை, செய்தது எல்லாம் நல்லதும் இல்லை, நடந்தது எல்லாம் சுத்தமும் இல்லை, நடக்க இருப்பது எல்லாம் நாசூக்கான நயவஞ்சக நாடகமே........ இனியும் இவரை நம்பாதீர்கள்.
13. திமுகவின் இரட்டை நிலைப்பாடு posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[13 April 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34269
தமிழகத்தில் அதிக இடங்களை பெரும் கட்சியிடமே மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சி ஆதரவு கோரும் நிலையில் தற்போதையை நிலவரப்படி வாய்ச்சொல் வீரர் கருணாநிதி பத்து இடங்களுக்கு மேல் ஜெயிப்பது கடினம்.
மதவாதத்திற்கு எதிராக பேசும் கருணாநிதி பிஜேபி க்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி கொடுக்க வில்லை. மோடிக்கு எதிராக தான் பேசுகிறார். பிஜேபி பெரும்பான்மை சீட்டுக்களை பெறாவிட்டால், அத்வானியை தவிர்த்து வாஜ்பாயியை கொண்டு வந்தது போல் வேறு யாரையாவது முகமூடியாக தேர்தலுக்கு பின் கொண்டு வந்தால் இந்த வாய்ச்சொல் வீரர் நாங்கள் சில நிபந்தனைகளுடன் ஆதரிக்கிறோம் என்று வாய் கூசாமல் சொல்ல கூடியவர்.
அம்மா எதிரி என்றால் அய்யா துரோகி. ஆகையால் திராவிட கட்சிகளை நம்பி மோசம் போனது போதும். அதிமுக வை விட திமுக அதிக சீட்டுக்கள் பெற்றால் அந்தர் பல்டி அடிக்க தயங்க மாட்டார் இந்த கலைஞர். இல்லை என்றால் நான் தான் சிறுபான்மை மக்களின் தலைவன் என்று தனக்கு தானே பட்டம் சூட்டி கொள்வார்.
திருநெல்வேலியில் நடந்த திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் மமக வை சேர்ந்த தலைவர் ஒருவர் மோடியை எதிர்த்து பேசிய பொழுது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை பெறுவதர்காகவே இந்த குள்ள நரி மோடியை எதிர்க்கிறது. பிஜேபி க்கு ஆதரவு இல்லை என்று திமுக உறுதிமொழி கொடுக்க தயாரா?
இஸ்லாமிய கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் பாரபட்சமின்றி நமது சமுதாய வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைப்பதும் மற்ற தொகுதிகளில் ஊழல் மற்றும் மதவாதத்திற்கு எதிராக போர்ராடும் ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆதரவு அளிப்பதே சால சிறந்தது ஆகும்.
14. Re:... posted byRilwan (TX)[13 April 2014] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34271
அடிப்படையில் திமுகாவை எதிர்க்கும் அதே வேகத்தில் ஆதுமுகாவையும் ஆரம்பம் முதலே எதிர்க்கிறோம் .. பீஜே எடுத்த முடிவு சந்தொசதிர்க்குரியதே ... ஆனால் மற்ற இயக்கங்கள் செய்த தவறு இவர் செய்ய வேண்டாம் .
நானும் திமுகாவை ஆதரிக்க தயாராக இருக்கிறேன் , இவை நடந்தால் ..
1) மோடியை புகழ்ந்து பெட்டி கொடுத்தது எதற்கு திருக்குவளை மு கருணாநிதி தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும் ..
2) கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் .
3) இப்போது இருக்கும் வேட்பாளர் தனது தந்தை மற்றும் சகோதரி பதவியில் இருந்த காலங்களில் மக்கள் நலப்பணி எதுவும் செய்யாததிர்க்கு வருத்தம் தெரிவிகக வேண்டும் .
4) தேர்தல் வாக்குறுதியில் தீசீடபுல்யோ பிரச்சினைக்கு தீர்வு சேர்க்கப்பட வேண்டும் ..
மேல் சொள்ளப்பட்டைகளில் இரண்டு கோரிக்கைகள் நடந்தாலே என் ஆதரவு தீமுகாவுக்கு தான் .
என்ன ? பயங்காட்டி ஒட்டு கேட்பதை விட்டு விட்டு கட்சி தலைமையிடம் பேசுங்களேன் ..
15. பி ஜ அவர்களின் மீது அவதூறு பரப்பியவர்கள் உணரட்டும்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[13 April 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34275
சகோதரர் பி ஜ அவர்களின் அ தி மு க ஆதரவு வாபஸ் அறிவிப்பு பாராட்ட கூடியது.. அ தி மு க விடம் பி ஜ அவர்கள் பெட்டி வாங்கி விட்டார் என்று தூற்றியவர் எல்லாம் இன்று உண்மையை உணர ஆரம்பித்துவிட்டார்கள்..
மேலும் TNTJ அமைப்பு நிர்வாகி பி ஜ அவர்கள் தங்களின் ஆதரவை எந்த கட்சிக்கு வழங்க போகிறார் என்பது எல்லோருக்கும் எதிர்பார்ப்பாக உள்ளது - பி ஜ அவரின் கண்ணோட்டத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கட்டும்.. ஆதரவு அளிக்கும் முன் அந்த கட்சியின் நிலைபாடு தேர்தல் முடிவுக்கு பின் மதவாத பி ஜ பி யுடன் எந்த சூல்நினையிலும் மதவாத பி ஜ பி ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம் என மிக உறுதியான வாசகத்துடன் அக்கட்சியின் தலைமையிடம் லெட்டர் வாங்கிய பிறகு ஆதரவளித்தால் அதை வரவேற்கிறேன்.. அக்கட்சி தி மு க வாக - கம்யுனிஸ்ட்டாக - ஆம் ஆத்மியாக இருக்கட்டும் அனைவருக்கும் இந்த உறுதி மொழி கடிதம் பொருந்தும்..
உறுதி மொழி கொடுத்த பிறகும் அக்கட்சி துரோகம் செய்தால்...? இனி வரும் காலங்களில் 2016 சட்டசபை தேர்தலில் அணைத்து முஸ்லீம் கட்சிகளும் மற்றும் முஸ்லீம் இயக்கங்களும் இணைத்து ஒன்றுபட்டு துரோகம் செய்த கட்சிக்கு தக்க பாடம் கற்பிப்போம்...!
கடந்த 2002 ஆம் ஆண்டு தனது பதவி சுகத்திற்காக பி ஜ பி யுடன் கூட்டணி அமைத்து மக்களைவையில் பொது சிவில் சட்டத்திற்கு தி மு க ஆதரவு அளித்ததை பி ஜ அவர்கள் மறந்து இருக்க வாய்ப்பில்லை.. ஆனால் முஸ்லீம் லீக் - ம ம க வும் அதை தெரிந்து இருந்தும் தி மு க வுடன் ஒரு MP சீட்டுக்காக ஆதரவளித்து இருப்பது குறிப்படத்தக்கது..
மத வெறி பிடித்த மோடியை உண்மையிலேயே மன தூய்மையாக எதிர்கொள்வது (குறிப்பு;- கேஜிரிவாளின் உள் மனதை முழமையாக அறிய முடியாவிட்டாலும்) தற்போது கேஜ்ரிவால் அவர்கள் ஒருவரை தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை..!
ஊழலுக்கும் - மதவாதத்திற்கும் எதராக இம்முறை நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாமே...!
ஊழல் மதவாதம் - ஒரு கட்சியிடமும், ஊழல் மதவெறி - மறு கட்சியிடமும் உள்ளதை மறுக்க முடியாது..! அதற்க்கு மாற்றமாக ஒரு மாற்றத்தை தேசத்தில் ஏற்படுத்தவே ஆம் ஆத்மி வரபெற்றுள்ளது..
பல 5 - 5 - 5 - 5 - 5 ஆண்டுகளை தொலைத்து விட்டோம் இனி ஒரு 5 ஆண்டு ஆம் ஆத்மியின் செயலை என்னவென்று தான் பார்ப்போமே..!
17. தாமதமாக எடுக்கப்பட்ட சரியான முடிவு. posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[13 April 2014] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34279
தாமதமாக எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், ததஜ எடுத்த முடிவு சரியானது, வரவேற்கப்பட வேண்டியது. ததஜவினர் முதலில் அதிமுகவை ஆதரித்ததற்கும், இப்போது ஆதரவை வாபஸ் வாங்கியதற்கும் உள்ள உண்மையான காரணத்தை வல்ல அல்லாஹ்தான் அறிவான். ஆதரவு வாபஸ் செய்த காரணத்தை மக்களுக்கு தெரிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
திங்கட்கிழமை வரை பொறுமையாக இருப்போம். அடுத்த கட்ட அறிவிப்பில் என்ன சொல்கிறார்கள்? என்று பார்போம்.
18. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[13 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34280
அஸ்ஸலாமு அலைக்கும்,
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்ற முது மொழி வேலை செய்திருக்கும் அதுமட்டும் அல்லாமல் முஸ்லிம் சமுதாயம், குறிப்பாக இந்த அமைப்பில் ஒரு சிலரை தவிர இந்த அரசியல் சூழ்நிலைகளில் தி . மு . க . கூட்டணியை தவிர அம்மா , ஆம்ஆத்மி மற்றும் எந்த கூட்டனிக்கு நம் வாக்குகள் விழுந்தாலும் அது நம் சமுதாயத்துக்கும் மொத்த நாட்டுக்கும் தீங்காக அமையும் என்பதை தாமதமாக உணர்ந்து இருப்பார்கள் இறைவன் நாடிவிட்டான் அவ்வளவுதான்.
முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து பொது நம் எதிரிகளுக்கும் , மற்றவர்களுக்கும் தங்கள் ஓட்டை போடாமல் நமக்கு தற்போது உள்ள சூழலில் சாதகமாக உள்ள கூட்டணியான தி . மு . க . தலைமையில் அமைந்துள்ள கூட்டனிக்கு நம் வாக்கினை அளித்தால் நமக்கு நல்லது .
ஆம் ஆத்மி சிந்தனை நமக்கு இந்த தேர்தலில் வேண்டாம் இது நம் சமுதாயத்துக்கு கண்டிப்பாக பாதகமாகதான் அமையும் என்பது உண்மை .
இந்த தேர்தல் முடிந்து வரும் காலத்துக்கு இந்த (ஆம் ஆத்மி) அமைப்பின் கொள்கைகள் நடவடிக்கைகளை கொண்டு நம் ஆதரவினை தீர்மானிக்கலாம் .
வாரணாசி தொகுதியை பொறுத்த மட்டும் ஆம் ஆத்மி கஜ்ரிவாலை பொது வேட்பாளராக எற்று கொள்ளலாம் மற்ற கட்சிகள் இணைந்து ஆதரவு கொடுக்க சரியான வாய்ப்பு நடப்பதுதான் கடினம் .
அணைத்து மாநிலங்களிளும் முஸ்லிம் மக்கள் அங்கு உள்ள சூழல் மற்றும் நாம் போடும் வாக்குகள் நம் பொது எதிரிகளுக்கு சாதகமாக அமையாவண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் இதுதான் இந்தியா முழுதும் நம் நிலைப்பாடாக இருக்க வேண்டும் .
நம் மக்களுக்கு வைக்கப்படும் தேர்தல் மையின் மூலம் இந்த முறை நம் நாட்டில் ஒற்றுமை நிலைக்கனும் நமக்கும் இந்த நிலையை அமைக்க வாய்புகள் கொடுக்கப்பட்டுள்ளது அதனை நம் சமுதாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .
19. பழனி பாபாவின் கண்ணோட்டத்தில்...... ஒரு வெள்ளோட்டம். posted bys.s.md meerasahib (TVM)[13 April 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 34281
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சமுதாய நல்லுள்ளம்களே...... இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கட்சிக்கு ஓட்டுக்களை போட்டு பழனி பாபா முயற்ச்சி எடுத்த நியாயமான MLA சீட்டுகளை தக்க வைத்து நம் இஸ்லாமியர்கள் சுட்டிக்காட்டும் நபரே முதலமைச்சர். என்பதை உணர்த்த கூடிய "பழனி பாபாவின் கண்ணோட்டத்தில்...... ஒரு வெள்ளோட்டம்". பார்க்கலாமே.......
இந்த நாடாளுமன்ற தேர்தலை. நீங்கள் D M K க்கு முதல் சந்தர்ப்பம் கொடுத்து உங்களின் தேவையான அவர்களிடம் வாக்குறுதிகளை வாங்கி மொத்த முஸ்லிமின் ஒரு ஒட்டு வங்கியை நாம் சுய பரிசோதனை செய்து கொண்டால் சட்ட மன்ற தேர்தலுக்கு நமக்கு உதவியாக இருக்கும்.
அரசியலில் கேரளா முஸ்லிம்களின் நிலைக்கு நாம் உயர்த்தப்படுவோம். இந்த வெள்ளோட்டம் புரோஜனம் தரும் பட்சத்தில் நாளை முஸ்லிம் அமைப்புகள் எல்லோரும் சேர்ந்து உங்களுக்குள் ஒரு தொகுதி பங்கீட்டை வைத்துக்கொண்டு. நாம்..... நம் காரியம்களை சாதித்தால்..... அடுத்தவர்கள் பின் நாம் ஏன் அலையும் நிலை. இந்த நிலை உருவானால் எல்லா முஸ்லிம்களும் ஆதரவு தருவார்கள் வஸ்ஸலாம்.
20. Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[13 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34287
TNTJ எடுத்த முடிவுக்கு மனமார்ந்த நன்றி.அனைத்து முஸ்லிம்களின் உள்ளத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்தும் உணர்வை வல்ல அல்லாஹ் ஒருமுக படுத்த துவங்கி விட்டான்!
கீரல் விழுந்த ரிக்கார்ட்மாதிரி திரும்ப திரும்ப ப.ஜ.காவிற்கு ஆதரவு கொடுத்தது திமு.க என்ற பல்லவியை பாடுகிறார்கள்!
அன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பல நிபந்தனையுடன் ப.ஜ.க விற்கு ஆதரவு அளித்தது உண்மைதான்.ஆனால் அந்த பெரிய தவறு தெரிந்தோ,தெரியாமலோ நடந்து விட்டது. அதற்காக இன்றுமுதல் மனம் வருந்துகிறேன் என்று கலைஞர் பலதடவை அறிவித்தும் விட்டார்!ஏன் நமூரில் நடந்த கூட்டத்தில் கூட பகிரங்கமாக தன் தவறை ஒப்புக்கொண்டு மனம் வருந்தி பேசினார் அல்லவா?அன்று முதல் இன்றுவரை அந்த பாசிசி கட்சியுடன் எந்த நிலையிலாவது கை கோர்த்தாரா?
காங்கரஸ் கூட்டணியில் இருக்கும்போது கூட,பல வேதனையனான சம்பவங்கள் நடந்தும் கூட,அரசுக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்காததற்கு காரணம்,இதன் மூலமாக மதவாத சத்தி ஆட்சிக்கு வந்து விடக் கூடாதே என்ற ஒரு சிறுபான்மையரின் பாதுகாப்பு கேடையமாக விளங்கிய இத் தலைவனை இன்னும் சந்தேகக்கண்ணோடு பார்க்கிறவர்களின் உள்மனதை வல்லோன் தான் அறிவான்!
மத்தியில் மோடியின் ஆட்சியமைந்தால்,ஒரு பாபர் மசூதியை இடித்தவர்கள்,இன்னும் ஓராயிரம் மசூதியை இடித்து இந்த நாட்டில் மிகப்பெரிய இனக்கலவரத்தை ஏற்படுத்தி ரதக்களரியுடைய கொடூர காட்சியாகத்தான் இந்த நாட்டைப் பார்க்க முடியும் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் கலைஞரும்,ஸ்டாலினும் திரும்ப,திரும்ப உள்ளப்பூர்வமாக சொல்லிவரும் இவர்களா வருங்காலத்தில் மோடியுடன் கை
கோர்ப்பார்கள்!
சிந்திக்கவேண்டும்,தி.மு.க அணியைதவிர்த்து மற்றைய அணியின் தலைவனோ,தலைவியோ(கம்னிஸ்ட் நீங்கலாக)
ப ஜ காவிற்கோ,மோடிக்கோ எதிராக ஒரு வார்த்தை சொல்கிறார்களா? அல்லது நம் முஸ்லிம் சமுதாய பாதுகாப்பிற்காக எந்த ஒரு வாககுறுதியாவது அவர்கள் வாயிலிருந்து வெளி வருகிறதா?அத்தனை பேர்களுக்கும் அதிகார வெறி,பதவிப்பித்து,எந்த இழிநிலைக்கு சென்றாலும் எனக்கு,பெட்டியும்,தொகுதியும் தந்தாலே போதும் என்று பறந்தலையும் பச்சோந்தி கூட்டம் தானே தற்போது வலம் வருகிறது!
கடைசிவரை தி.மு.க வா? பா ஜா க வா? என்று பெட்டியும்,தொகுதியும் பேரம்பேசப்பட்டு,முடிவில் எங்கே "கனம்" கூடுதலோ அங்கே சென்ற ஒரு நடிகனுக்கு தற்போது தி.மு க. கசக்கிறது. ஊழல நிறைந்த கட்சியாக தெரிகிறது. மோடிதான் மனித புனிதன் என்று இரவில் ஒருவார்த்தையும் விடிந்தபின் தெளிந்தபின் ஒரு வார்த்தையுமாக உளறுகிறார். நான் என்ன பேசினேன் என்று எனக்கே மறந்து விட்டது என்று பலகூட்டங்களில் சொல்லியும் வருகிறார்!
நல்லவனாக இருந்தால்மட்டும் போதுமா,வல்லவனாகவும் திறமையான் ஆளுமை ஆற்றல் நிறைதவனாக இருக்கிறானா என்பதை அறிய வேண்டுமே. அவருக்கு அந்த அனுபவம் வந்த பிறகே அவரை ஆதரிப்பதற்கு இந்த நாட்டின் சிறுபான்மையர் முதல் அனைவரும் முன்வருவார்கள்.என்னுடைய இந்த உதாரணம் ஆம் ஆத்மி கட்சிக்குதான் 100% சதவீதம் பொருந்தும்!
முதலில் பெரும்பான்மை இனத்தவர்களின் ஓட்டைப்பெற்று திறம்பட ஆட்சி செய்து,சிறுபான்மையரின் பாதுகாப்பை உறுதி செய்யட்டும்.அதன் பிறகு அவர்களை ஆதரிப்பதற்கு பரிசீலிக்கலாம்!அதை விட்டு விட்டு ஏதோ அவசர கோலத்தில்,ஆராயாமல் முடிவெடுத்து நம் வாக்கை அளிப்போமேயானால் தற்போதுள்ள நிலையில்,நம் வாக்கு வீணாகி,அவர் வெற்றியும் பறிபோகும்!
சிறுபான்மையர்களாகிய நாம் தற்போது நம்மை பயமுறுத்தும் ஒரு பூதத்தின் முன்னால் நிற்கிறோம் எந்த நேரத்திலும் நம்மை விழுங்கி விடுமோ என்ற அச்சத்தில் அல்லாஹ்விடம் அஞ்சி நடுங்கி துவா கேட்கிறோம் ,அவன் நினைத்தால் அரை நொடிகூட ஆகாது பெரிய பூததைக்கூட புஸ்வானமாக ஆக்கி விடுவான்!
ஆகவே அன்பு இஸ்லாமிய சமுதாயமே இன்று நமக்கு ஆதரவளிக்கும் ஒரே அணி ஜனநாயக முற்போக்கு கூட்டணியாகும்,வேறெந்த கட்சியும் முஸ்லிம்களுக்கு கொடுக்காத மரியாதையை,நான்கு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி அழகு பார்க்கிறது இந்த ஜனநாயக் முற்போக்கு முற்போக்கு கூட்டணி. மதவாதத்தை முறியடிப்போம் என்று சபதம் ஏற்கும் அணி எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம் வாழ்வுரிமைக்குறிய 3.5.சதவீத இடஒதிக்கீட்டை கொடுத்தது இந்த அணியின் தலையான கட்சி தி.மு.க. தான்!
முஸ்லிம்களுக்கு இந்த இடஒதிக்கீடு தேவையில்லை என்று அம்மையார் பகிங்கரமாக எதிர்த்தும் நம் இன மக்களுக்காக கொடுத்த அந்த நன்றிக்கடனுக்காகவாவது நாம்அனைவரும் நன்றிமறவா உண்மையான முஸ்லிம் மாந்தர்கள் என்பதற்க்கடையாளமாக நம் வாக்கை ஜனநாயக் முற்போக்கு கூட்டணிக்கு செலுத்துவோமாக!
அல்ல்ஹ் அனைத்தும் அறிந்தவன்
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்! .
21. Re:... posted byRilwan (TX)[13 April 2014] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34296
கருணாநிதி மீது ஈமான் கொண்டுள்ள இந்த மக்களை நினைத்தால் சிரிப்ப தான் வருகிறது ..
திமுகாவிற்கு நீங்கள் வாங்கி கொடுக்கும் ஒவ்வொரு எம்பியும் கருணாநிதிக்கு பீஜெபீஉடன் பேரம் பேச மட்டுமே உதவும் .
கூட்டணி அறிவிக்கப்படும் முன்பு வரை பீஜெபிக்கு துண்டு போட்டு பார்த்தவர் தான் அரசியல் வியாபாரி கருணாநிதி .
கருணாநிதியின் வேட்பாளர்களை எதிர்க்க வேண்டியது மானுட கடமை .
கருணாநிதி ஒரு விஷக்கிருமி என்பதில் துளியும் சந்தேகமில்லை .
மோடியை எதிர்ப்பது திமுகா என்று ஒரு சகோதரர் கூறியுள்ளார் .. பொய் சொல்லுகிறாரா இல்லை உலக ஞானம் இவ்வளவு தான என புரிய வில்லை .
மோடியை முழு மூச்சாக எதிர்ப்பவர் ஆம் ஆத்மி மட்டுமே ..
மோடியோடு ஆம் ஆத்மி கூட்டணி என்பது பிரசாந்த் பூசன் இருக்கும் வரை , மேத்தா பட்கர் இருக்கும் varai, உதய குமார் இருக்கும் வரை நடக்காது ..
பிஜேபி , சங்க பரிவார் , மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் தேச விரோதிகளாக சித்தரிக்கப்பட்ட மக்கள் தொண்டர்களை நாடாளுமன்ற வேட்பாளர்களாக அறிவித்த கட்சி ஆம் ஆத்மி மட்டுமே ..
இவர்கள் பதவிக்காக விலை பேசும் முகா போன்ற மட்டமானவர்கள் அல்ல .
மாவட்டத்தில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துபவர்களுக்கு ஒட்டு கேட்க மனசாட்சி உள்ளவர்களால் முடியாது .
22. தி மு க வாக்குகள் காயலில் குறைந்து விட்டது..! தேர்தல் முடிவிற்கு பிறகு உணருவீர்கள்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[14 April 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34300
கீரல் விழுந்த ரிக்கார்ட்மாதிரி திரும்ப திரும்ப ப.ஜ.காவிற்கு ஆதரவு கொடுத்தது திமு.க என்ற பல்லவியை பாடுகிறார்கள்! CP
அன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பல நிபந்தனையுடன் ப.ஜ.க விற்கு ஆதரவு அளித்தது உண்மைதான். CP -
அன்று என்ன நிபந்தனை..! பி ஜ பி கொண்டுவரும் பொது சிவில் சட்டத்திற்கு தி மு க ஆதவு அளிப்போம் என்ற நிபந்தனையா...? பதில் தாருங்கள் ஆதம் சுல்தான் அவர்களே..!
இம்முறை இசுலமியர்களாகிய நீங்கள் தி மு க விற்கு வாக்களித்தால் தேர்தல் முடிவுக்கு பிறகு பி ஜ பி க்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று முஸ்லீம் கட்சிகளுக்கும் முஸ்லீம் வாக்காளர்களுக்கும் உறுதி மொழி கடிதம் தி மு க தலைமை துண்டு பிரசுரமாக கொடுத்துள்ளார்களா..? அல்லது முஸ்லீம் கட்சிகள் தி மு க விடமிருந்து தேர்தல் முடிவிற்கு பின் பி ஜ பி க்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தி மு க விடம் நிபந்தனை கடிதம் பெற்று முஸ்லீம் கட்சிகள் தி மு க வுடன் கூட்டணி அமைத்துள்ளார்களா..? பதில் தாருங்கள் ஆதம் சுல்தான் அவர்களே..!
இந்த ஒரு விசியத்தில் தி மு க (நிலைபாடு சந்தேகத்துக்குரியது) இரட்டை வேடமே பிரதிபலிக்கிறது...! நகர் மக்கள் 500 க்கும் மேல் ஆம் ஆத்மியை ஆதரிக்கிறார்கள் என்பதே உண்மை..!
23. அல்லாஹ் நம் அனைவர்களின் உள்ளத்திலும் ஒற்றுமையை வேரூன்ற செய்வானாக ஆமீன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[14 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34322
நான் என்றும் மதிக்கும் சகோதரர் முத்து இஸ்மாயில் அவர்கள் என்பெயரை குறித்து கேள்வி எழுப்பியதால் அவருக்கு என் பதில் என்பதை விட என் விளக்கம் என்ற அடிப்படையில் இதைக்கூறுகிறேன்!
அன்றைக்கு தி.மு.க ப.ஜ.விற்கு ஆதரவு அளித்ததில் நாம் எவ்வளவு பாதிக்கப்பட்டோம் என்ற விசியத்தில் நான் சமரசம் செய்ய முன் வரவில்லை.மாறாக,நீங்கள் (முஸ்லிம்கள்) பாதிக்கப்பட்டு விட்டீர்கள் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஒரு தலைவனை,அத்தவறுக்கு வருந்திய ஒருதலைவனை, அந்த தவறுககுப்பின் அன்று முதல் இன்று வரை அந்த கட்சியுடன் உள்ள தொடர்பை துண்டித்த ஒரு தலைவனைத்தான் நம்புங்கள் என்று கூறுகிறேன்!
அடுத்து,பிரமானபத்திரம் தி.மு.கவிடமிருந்து பெறவேண்டு மென்று கூறுகிறீர்கள்,அரசியல் அனுபவம் பெற்ற உங்களிடமிருந்து இந்த வாசகம் வருவதைப்பார்த்து ஆச்சிரியமுறுகிறேன்.எந்த கட்சி தலைவனோ, தலைவியோ
இப்படிப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய வாக்குறுதியை எழுதி கையொப்பமிட்டு கட்சி முத்திரையுடன் பத்திரம் போட்டு தருவார்களா? வேடிக்கையாய் இல்லை.அப்படி எந்த கட்சியாவது நீங்கள் சொல்வதுபோல் நிபந்தனைகளடங்கிய பத்திரத்தை நம் சமுதாயத்திற்கு தந்திருப்பதை உங்களால் காட்ட முடியும்?
அல்லது நீங்கள் கூறும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்திற்குறிய உத்தரவாதத்தை தாங்கள் கூறுவதுபோல் பதிரம்போட்டு எழுதி கையெழுத்திட்டு கட்சி முத்திரையுடன் தந்திருக்கிறார? இருந்தால் காட்டுங்களேன் தயவுசெய்து.
ஒரு கட்சியை, ஒரு தலைவனை எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் முளைத்துவிட்டால் ஓராயிரம் கேள்விகளை மனதுக்குள் மாற்றி,மாற்றி யோசித்து குற்றம் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கலாம்!
என்னுடைய இறுதி கருத்தாக நான் சொன்னது இப்போது நம் சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்திலிருந்து நாம் பாதுகக்கப்படவேண்டுமேயானால் தற்போது நம்மை அரவணைக்கும் அணியாகிய வெற்றி வாய்ப்புள்ள அணியாகிய ஜனநாயக முற்போக்கு அணிக்கே வாக்களியுங்கள் என்றுதான் என் கருத்தை வலியுறுதினேன்.அல்லாஹ் நம் அனைவர்களின் உள்ளத்திலும் ஒற்றுமையை வேரூன்ற செய்வானாக ஆமீன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
24. Re:... மிக்க மகிழ்ச்சி posted byஅஹ்மது ஜபருல்லாஹ் நத்வி (பனையூர், சென்னை)[14 April 2014] IP: 223.*.*.* India | Comment Reference Number: 34327
இது நீண்ட நாட்களாக நான் முதற்கொண்டு நாட்டின் பலர் கேட்டுக் கொண்டிருந்த துஆவின் பலன் என்று தான் நினைக்கின்றேன். அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது மிகவும் கசப்பாக உணரப்பட்டது. சமவுரிமை ஏப்ரல் மாத இதழ்-2014 பக்கம் 28-ல் கவிஞர் வீரை எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை அடிப்படையாகக் கொண்டு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நல்ல பதிலாகவும் தவ்ஹீத் ஜமாஅத்தின் இம்முடிவு அமைந்துள்ளது. தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மிக்க நன்றி. எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எல்லா முஸ்லிம்களையும் ஓர் அணியில் ஒன்று படச் செய்வானாக! ஆமீன்.
மவ்லவி ஹாபிள் அஹ்மது ஜபருல்லாஹ் நத்வி, எம்.ஏ. பி.எட், பி.எச்.டி.
(துணை ஆசிரியர்: சமவுரிமை மாத இதழ்)
பேராசிரியர் நூருல் ஹிதாயா ஆங்கிலோ அரபிக் கல்லூரி,
பனையூர், கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை-119
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross