காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவில், ஆறாம்பள்ளிவாசல் அருகிலுள்ள மின் கம்பத்திற்கும், பிரதான வீதியிலுள்ள மின் கம்பத்திற்குமிடையில், மெயின் லைன் கம்பி வடம் அறுந்து விழுந்து கிடந்தது.
இன்று (ஏப்ரல் 11) அதிகாலையில் அவ்வழியே சென்ற சிலர் இதனைக் கண்ணுற்று, காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்ததையடுத்து, மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, அறுந்த கம்பி வடத்தை சரிசெய்து பொருத்தினர்.
கம்பி வடத்தின் மீது அமரும் பறவைகள் கம்பி போன்ற ஏதேனும் பொருட்களை இரண்டு கம்பி வடங்களுக்கிடையில் போட்டதால் கம்பி வடம் அறுந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மின் தடை செய்யப்பட்ட நேரத்தில் கம்பி வடம் அறுந்து விழுந்ததால், சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
தகவல்:
A.S.புகாரீ |