இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் - அதன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆஸாத் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் முஹம்மத் நெய்னா, மாவட்ட துணைச் செயலாளர் ‘முர்ஷித்’ முஹ்ஸின், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஜோதி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஹஸன், காயல்பட்டினம் நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், நகர செயலாளர் ஐதுரூஸ், பொருளார் எஸ்.டி.இப்றாஹீம், துணைத்தலைவர் காதர் உள்ளிட்ட கட்சியினர், காயல்பட்டினம் கடைவீதிகளில் பொதுமக்களுக்கு பிரசுரங்களை வினியோகித்து ஆதரவு கோரினர்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |