வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், வழமை போல இவ்வாண்டும் காயல் ப்ரீமியர் லீக் என்ற பெயரில் நகரளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, க்ரிக்கெட் விளையாட்டுப் போட்டி, வரும் மே 02 அன்று துவங்குகிறது. போட்டியில் கலந்துகொள்ளும் 8 அணிகளுக்கான வீரர்கள் சேர்க்கை இம்மாதம் 17ஆம் நாள் வரை நடைபெறுகிறது. 18ஆம் நாளன்று - பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் வீரர்கள் தேர்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் இளைஞர்களின் விளையாட்டு திறமையை மெருகூட்டவும், ஒற்றுமையை நிலைநாட்டவும் வேண்டி கடந்த 5 ஆண்டுகளாக கால்பந்து போட்டியினையும், 4 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டியினையும், 2 ஆண்டுகளாக கைப்பந்து போட்டியினையும் ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் வல்ல இறைவனின் துணையோடு, காயல்பட்டினத்தின் ஐக்கிய விளையாட்டுச் சங்கம், காயல் ஸ்போர்டிங் கிளப் மற்றும் நகரின் அனைத்து விளையாட்டை ஊக்குவிக்கும் அமைப்புகளின் ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாருடம் இன்ஷாஅல்லாஹ் 6-வது ஆண்டாக கால்பந்து போட்டியினையும், 5-வது ஆண்டாக கிரிக்கெட் போட்டியினையும், 3-வது ஆண்டாக வாலிபால் (கைப்பந்து) போட்டியினையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
துவக்கமாக வருகின்ற மே மாதம் 2-ம் தேதி முதல் காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ளன. இதில் 8 அணிகள் பங்குகொள்ள உள்ளது. இவ்வணிகளுக்கான வீரர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது.
வருகின்ற 17-ம் தேதி வரை விளையாட்டு வீரர்களிடம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு, 18-ம் தேதி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே காயல் மாநகரின் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இடம்/நபர்களிடம் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கி, தாங்கள் வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை உறுதிபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விண்ணப்பங்கள் கிடைக்குமிடம் மற்றும் நபர்களின் விபரம்:
A.H.யாஸர் அரஃபாத் : கலாமீஸ் குலோதிங்ஸ் : 9894376281
இம்ரான் : 9944468304
M.ஜஹாங்கீர் : அல்தாஃப் எண்டர்பிரைசஸ் : 9171776763
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
வி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் 2014 குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |