இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டும் முகமாக, கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம், இம்மாதம் 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை 19.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப் உட்பட பலர் சிறப்புரையாற்றவுள்ளனர். இக்கூட்டத்தை முன்னிட்டு, அன்று மாலையில் முகவை சீனி முகம்மதுவின் இன்னிசை கச்சேரியும் நடைபெறவுள்ளது.
தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |