அமெரிக்கா அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் அந்நாட்டிற்கு
மூன்று வார பயணம் மேற்கொண்டு காயல்பட்டினம் திரும்பிய - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், நன்றி அறிக்கை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் - அமெரிக்காவின் பல ஊர்களில், பல
நல்ல விசயங்களை தன்னால் காண முடிந்தது. என்றும், அந்த அனுபவங்கள் அனைத்தும் - சமுதாயத்திற்கு பிரயோசமான முறையில் பயன்பெற -
தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்பதிவின் முழு விபரம் வருமாறு:
இறைவனின் பெரும் கிருபையில் எங்களின் 3 வார, அமெரிக்க பயணம் இனிதாக நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ். எங்கள் பயணம் இனிதாக
அமைந்திட பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்த பயண வாய்ப்பை எங்களுக்கு தந்த அமெரிக்க அரசாங்கத்திற்கும், சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும், அமெரிக்காவில் எங்கள்
நிகழ்சிகளை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து தந்த அனைத்து நிறுவனங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், எங்களை சந்தித்து, எங்களுடன்
கலந்துரையாடி - தங்கள் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் - விளக்கங்கள் அளித்த அனைத்து வல்லுனர்களுக்கும், அமைப்புகளுக்கும்
எனது மனமார்ந்த நன்றி.
பல ஆயிரம் மைல் தூரத்தில் இருந்தாலும், அமெரிக்காவில் எங்களை நேரில் சந்தித்தும், தொலைப்பேசியில் உரையாடியும் - காயலில் இருப்பது
போல் மகிழ்ச்சியை ஏற்படுத்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்த 21 நாள் பயணத்தில் - அமெரிக்காவில் எங்களுடன் பயணித்த ஆங்கில மொழி அலுவலர் WLADEK KOPINSKI, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ARUN
MUTHUKUMAR, அவரின் மனைவி PREETHA GANDHI ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி.
21 நாட்களும் - உடன் பயணம் செய்த சக குழுவினர், ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development அறக்கட்டளை),
ஜைபுநிஷா (மனிதம் அறக்கட்டளை), ஷாபி முஹம்மது (ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ்
(ஆர்வலர் / குறும்பட தயாரிப்பாளர்) ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி.
மறைந்த எனதன்பு தந்தை பாளையம் இப்ராகிம் அவர்கள் - எனக்கு சிறு வயதில் இருந்து பொது சேவையில் ஆர்வமூட்டி வளர்த்ததை நான் இந்த
தருணத்தில் நினைவு கூறுகிறேன். அவர்கள் வழங்கிய ஆர்வம், எனது கணவர் வழங்கிய ஒத்துழைப்பு கொண்டு தான் - காயல்பட்டினம் நகர்மன்றத்
தலைவர் பொறுப்புக்கு நான் போட்டியிட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து, சாதாரண என்னை - ஐந்தாண்டுக்கு நகர்மன்றத் தலைவியாக தேர்வு
செய்த ஆயிரங்கணக்கான சகோதர, சகோதரிகளுக்கு - இந்த தருணத்தில் - என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
எனது இந்த 21 நாள் பயணத்தில் - அமெரிக்காவின் பல ஊர்களில், பல நல்ல விசயங்களை என்னால் காண முடிந்தது. அந்த அனுபவங்கள்
அனைத்தும் - நம் சமுதாயத்திற்கு பிரயோசமான முறையில் பயன்பெற - நான், என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்,
இன்ஷா அல்லாஹ்.
இதற்கான முழு ஆதாரவையும், ஆலோசனைகளையும் - நமதூரின் சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் வழங்கும்படி நான் கேட்டு கொள்கிறேன்.
ஜசக்கல்லாஹ் ஹைர்.
இவ்வாறு தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ...
தூத்துக்குடி விமான நிலையத்தில் ...
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|