இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
இம்மாதம் 05ஆம் நாள் மாலையில், அவர் காயல்பட்டினம் நகரில் வீதி வீதியாக பரப்புரை செய்தார்.
ஐக்கிய விளையாட்டு சங்க நுழைவாயில் முன்பிலிருந்து பரப்புரையைத் துவக்கிய அவர், புறவழிச் சாலை, சிவன்கோயில் தெரு, காட்டு தைக்கா தெரு, குத்துக்கல் தெரு, மகுதூம் தெரு, தைக்கா தெரு, பிரதான வீதி, முஹ்யித்தீன் தெரு, கோமான் தெரு, நெய்னார் தெரு, சதுக்கைத் தெரு, அம்பல மரைக்கார் தெரு, கி.மு.கச்சேரி தெரு, ஆஸாத் தெரு, சித்தன் தெரு, தீவுத்தெரு, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு, அப்பா பள்ளித் தெரு, அலியார் தெரு, கே.டி.எம். தெரு, காயிதேமில்லத் நகர், பேருந்து நிலையம், எல்.எஃப். வீதி, இரத்தினபுரி, சீதக்காதி நகர், மருத்துவர் தெரு ஆகிய வீதிகளில், தனது ஆதரவாளர்களுடன் சென்று பரப்புரை செய்த அவர், மஹான் ஸாஹிப் அப்பா தைக்காவில் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீதை, வேட்பாளர் ம.புஷ்பராயன் - அவரது இல்லம் சென்று சந்தித்து ஆதரவு கோரினார்.
புதுப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை அருகில் அவர் தனது பரப்புரையை முடித்துக்கொண்டார்.
பரப்புரை செய்த இடங்களிலெல்லாம், காயல்பட்டினத்திற்கென தனியாக அச்சிடப்பட்ட பிரசுரத்தை அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களிடம் வினியோகித்தனர்.
தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |