காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின்
டெட்ராய்ட் நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.
டெட்ராய்ட் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல் நகரினை மார்ச் 26 புதன்கிழமையன்று
மாலை சென்றடைந்தனர்.
சியாட்டல் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், அலபாமா மாநிலத்தின் தலைநகர்
மோன்ட்கோமேரி நகரினை மார்ச் 30 ஞாயிறன்று சென்றடைந்தனர்.
மோன்ட்கோமேரி / செல்மா நகரங்களில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஏப்ரல் 2 அன்று
குழுவினர், அட்லாண்டா விமான நிலையம் வழியாக, அமெரிக்காவின் வர்த்தக தலைநகரான நியூயார்க் சென்றடைந்தனர்.
குழுவினருக்கு - நியூயார்க் நகரில் ஏப்ரல் 3, ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நியூயார்க் நகரில் - அங்கு ஐ.டி. துறையில் பணிப்புரியும் காயல்பட்டினம் தைக்கா தெருவை சார்ந்த ஏ.எம். தௌஃபீக் - குழுவினரை சந்தித்தார்.
அவர்களுக்கு தனது இல்லத்தில் தயார் செய்யப்பட்ட பிரியாணி, கடற்பாசி உட்பட காயல்பட்டினம் பாரம்பரிய உணவினை வழங்கிய அவர், குழுவினர்
ஒவ்வொருவருக்கும் - நியூயார்க் நகரின் அடையாள சின்னங்கள் பொருந்திய நினைவு பரிசும் வழங்கினார்.
குழுவினர் - தங்கள் ஓய்வு நேரத்தில் நியூயார்க் நகரின் பிரசித்தி பெற்ற STATUE OF LIBERTY, ஐக்கிய நாட்டு சபை வளாகம், TIMES SQUARE, NEW YORK STOCK EXCHANGE உட்பட பல இடங்களுக்கு சென்றனர்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
[Administrator: கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 1:30 pm / 08.04.2014]
|