காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின்
டெட்ராய்ட் நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.
டெட்ராய்ட் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல் நகரினை மார்ச் 26 புதன்கிழமையன்று
மாலை சென்றடைந்தனர்.
சியாட்டல் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், அலபாமா மாநிலத்தின் தலைநகர்
மோன்ட்கோமேரி நகரினை மார்ச் 30 ஞாயிறன்று சென்றடைந்தனர். அங்கு மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய
இரு தேதிகளுக்கு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன.
ஏப்ரல் 1 தேதிய அனைத்து நிகழ்ச்சிகளும் - மோன்ட்கோமேரி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதலாவதாக குழுவினர் - அலபாமா மாநில பல்கலைக்கழகத்தின் (Alabama State University) வளாகத்திற்கு சென்றனர். அங்கு குழுவினருக்கு National Center for the Study of Civil Rights and African American Culture என்ற பிரிவின் அலுவலர்களுடன் சந்திப்பு - காலை 10 மணி முதல் 11 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரிவு - அமெரிக்க கருப்பு இன மக்களின் சம உரிமை போராட்டத்தில், மோன்ட்கோமேரி நகரின் முக்கிய பங்கு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டும், அதற்கான ஆவணங்களை பராமரித்தும் வருகிறது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் - தான் இந்தியாவில் இருந்து கொண்டு வந்திருந்த அமெரிக்க கருப்பு இன மக்களின் உரிமைகளுக்காக போராடிய மார்டின் லூதர் கிங் பற்றிய தமிழ் புத்தகம் ஒன்றை - அம்மையத்தின் வெளிநாட்டு மொழிகள் நூலகத்திற்கு வழங்கினார்.
முதல் நிகழ்ச்சியினை தொடர்ந்து - குழுவினருக்கு, 11 மணி முதல் 12:30 மணிவரை - மோன்ட்கோமேரி நகரின் வரலாற்றில் இடம்பெற்ற இடங்கள்
(Driving tour of Downtown Montgomery-Alabama Capitol, Riverwalk District) காண்பிக்கப்பட்டது.
மதிய உணவிற்கு பிறகு குழுவினர் Southern Poverty Law Center என்ற உலக பிரசித்தி பெற்ற அமைப்பின் அலுவலகத்திற்கு சென்றனர். இது 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மக்கள் உரிமை சட்ட மையமாகும். இந்த அமைப்பு வெள்ளை இன ஆதிக்கவெறி உட்பட ஏறத்தாழ 1000 அமெரிக்க, உள்நாட்டு தீவிர வாத அமைப்புகளை கண்காணித்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவற்றை செயல் இழக்க செய்ய முயற்சிகள் மேற்கொள்கிறது.
குழுவினர் 1:00 மணி முதல் 1:30 மணி வரை, இவ்வமைப்பின் பிரிவின் இயக்குனர் மார்க் போடகை (Mark Potok, Director, Intelligence Project, and Editor of the Intelligence Report) சந்தித்தனர். அவர் - குழுவினரிடம், அமெரிக்காவில் உள்ள துவேசத்தை பரப்பும் அமைப்புகளை எவ்வாறு இவ்வமைப்பு கண்காணிக்கிறது என்பது பற்றி விளக்கினார்.
1:30 மணி முதல் 2:00 மணி வரை, இவ்வமைப்பின் கல்வியாளர் எமிலி சியாரிஎல்லோ (Emily Chiariello, Teaching and Learning Specialist, Teaching Tolerance) - கல்வி மூலம் சகிப்புத்தன்மையை எவ்வாறு வளர்ப்பது (Teaching Tolerance: Benefits of Tolerance Education and Program Development) என்பது குறித்து விளக்கங்கள் அளித்தார்.
ஏப்ரல் 1 அன்று இறுதி நிகழ்ச்சியாக, குழுவினர் APPLESEED CENTER FOR LAW AND JUSTICE என்ற அமைப்பின் அலபாமா பிரிவின் அலுவலகத்திற்கு
சென்றனர். இவ்வமைப்பின் ஜேன்ஸ்மித் (Zayne Smith, JD, Immigration Policy Fellow and Communications Coordinator) - இந்த
அமைப்பின் பணிகள் பற்றி குழுவினருக்கு விளக்கினார்.
இந்த அமைப்பு - சமுதாயத்தில் பின் தங்கிய மக்கள், குரலிழந்த மக்கள்
ஆகியோருக்கு நீதி கிடைத்திட, சட்டம் / அரசு திட்டம் மாற்றங்களை கொண்டு வர பணிப்புரிகிறதாம். இந்த அமைப்பு வாஷிங்டன் டி.சி. நகரில்
துவக்கப்பட்டு, அமெரிக்காவின் பல இடங்களில் இந்த அமைப்பிற்கு கிளை அலுவலகங்கள் உள்ளது. இந்த சந்திப்பு 2:30 மணி முதல் 3:30
மணிவரை நடைபெற்றது.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|