இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், வழக்குரைஞர் அ.மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, நேற்று (ஏப்ரல் 04 வெள்ளிக்கிழமை) 17.00 மணியளவில், காயல்பட்டினம் கடற்கரையருகிலும், நகரின் பல பகுதிகளிலும், தேர்தல் பரப்புரை வாகனம் மூலம் உரை நிகழ்த்தி ஆதரவு திரட்டப்பட்டது.
நடப்பு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |