இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அவர்களுக்கான துணை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு சுஷாந்த் குமாரும், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கு வஸீமுர்ரஹ்மானும் தேர்தல் (செலவின) பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது கட்டுப்பாட்டின் கீழ், சட்டமன்றத் தொகுதி வாரியாக 6 உதவி தேர்தல் (செலவின) பார்வையாளர்கள் பின்வருமாறு நியமிக்கப்பட்டுள்ளனர்:
1. கோவில்பட்டி - வேணுகோபால்
2. ஓட்டப்பிடாரம் - ஆறுமுகபெருமாள்
3. விளாத்திகுளம் - பால சிவனேசன்
4. தூத்துக்குடி - அழகு
5. திருச்செந்தூர் - கோபி கிருஷ்ணன்
6. ஸ்ரீவைகுண்டம் - நல்ல பெருமாள்
மேற்படி உதவி தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் செலவின கணக்குகளை ஆய்வு செய்து, தேர்தல் பார்வையாளர்களுக்கு அறிக்கையாக அனுப்புவர்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |