தமிழ் மொழி மீது பற்றுகொண்ட காயலர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மொழி வளர்ச்சி உள்ளிட்ட – தமிழ் மக்களுக்கான பல்வேறு செயல்திட்டங்களைக் கொண்டு இயங்கி வரும் அமைப்பு இளம் இந்திய நண்பர்கள் குழு - Young Indian Friends Club (YIFC).
2004ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இவ்வமைப்பு தற்போது தனது 10ஆம் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ளது. இதனை முன்னிட்டு, 10ஆம் ஆண்டு விழாவை ஹாங்காங்கில் விமரிசையாக நடத்திட இவ்வமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 12ஆம் நாள் சனிக்கிழமை 19.00 மணிக்கு, 238, சை வான் சாலை, சை வான், (சை வான் MTR வாயில் A) என்ற முகவரியிலுள்ள The Y-Theatreஇல் நடைபெறவுள்ளது.
ஹாங்காங் நாட்டிற்கான இந்திய தூதர் பிரசாந்த் அக்ரவால், சென்னையிலுள்ள நீதிபதி பஷீர் அஹ்மத் செய்யித் மகளிர் கல்லூரியின் துணைப் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா, பெய்ஜிங்கில் இயங்கி வரும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு இணையதள மேலாளர் ஜாங் டோங்யீ (மதியழகன்) ஆகியோர் இவ்விழாவில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
விழா நிகழ்முறை குறித்து வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ்:-
[மேற்கண்ட அழைப்பிதழைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
நடைபெறவுள்ள இவ்விழாவில், ஹாங்காங், சீனா, மக்காவ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு, இளம் இந்திய நண்பர்கள் குழு அமைப்பின் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல்:
இளம் இந்திய நண்பர்கள் குழு – ஹாங்காங் சார்பாக...
தைக்கா உபைதுல்லாஹ்
அப்துல் அஜீஸ்
ஹாங்காங் இளம் இந்திய நண்பர்கள் குழு அமைப்பின் தமிழ் வகுப்பு செயல்திட்டம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
10ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
2009ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சுற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
2007ஆம் ஆண்டு நடைபெற்ற - அமைப்பின் 3ஆம் ஆண்டு விழா குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |