காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின்
டெட்ராய்ட் நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.
டெட்ராய்ட் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல் நகரினை மார்ச் 26 புதன்கிழமையன்று
மாலை சென்றடைந்தனர்.
சியாட்டல் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், அலபாமா மாநிலத்தின் தலைநகர்
மோன்ட்கோமேரி நகரினை மார்ச் 30 ஞாயிறன்று சென்றடைந்தனர்.
சியாட்டல் நகரில் இருந்து புறப்பட்ட குழுவினர் - டெக்சஸ் மாநிலம் டாலஸ் நகர் வழியாக, அலபாமா மாநிலத்தின் தலைநகரான மோன்ட்கோமேரி
சென்றனர். அங்கு மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய இரு தேதிகளுக்கு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன.
டாலஸ் விமான நிலையத்தில்...
மோன்ட்கோமேரி விமான நிலையத்தில்...
மார்ச் 31 அன்று குழுவினரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் - மோன்ட்கோமேரி நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செல்மா நகரில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க நாட்டின் கருப்பு இன மக்கள் - தங்கள் உரிமைக்காக போராடிய பல போராட்டங்கள் நடந்த ஊர்களில் இதுவும்
ஒன்று.
சுமார் 20,000 மக்கள் வாழும் செல்மா நகரில் - 80 சதவீத மக்கள் கறுப்பர். இங்குள்ள உள்ளாட்சி மன்றத்திற்கு ஒரு மேயரும், 9 உறுப்பினர்களும்
உள்ளார்கள். இவ்வூரின் மேயரான ஜார்ஜ் பேட்ரிக் இவான்சை (Mayor George Patrick Evans, Mayor of Selma, Alabama) குழுவினர்
சந்தித்தார்கள். இந்த சந்திப்பு காலை 8:30 முதல் 9:30 வரை நடைபெற்றது.
கல்வியாளரான ஜார்ஜ் பேட்ரிக், 2008ம் ஆண்டில் இருந்து இந்நகரின் மேயராக உள்ளார். இப்பொறுப்புக்கு வரும் கறுப்பர் இனத்தை சார்ந்த
இரண்டாவது மேயர் இவர்.
இந்த சந்திப்பின் போது - கருப்பு இன (ஆப்ரிக்க-அமெரிக்க) மக்களின் - செல்மா நகரில் தற்போதைய செல்வாக்கு குறித்தும், அவ்வின மக்கள்,
பிரதிநிதிகளாக தேர்வாகி பொறுப்புகளுக்கு வருவதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் விளக்கினார்.
மேயருடனான சந்திப்பினை தொடர்ந்து இரண்டாவது நிகழ்ச்சி, செல்மா நகரின் பிரபல வரலாற்று ஆசிரியரோடு வரலாற்றில் இடம்பெற்ற இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழுவினருக்கு - வரலாற்று ஆசிரியரும், SELMA: QUEEN CITY OF BLACK BELT என்ற புத்தகத்தை எழுதியவருமான Alston Fitts - காலை 10 மணி முதல் 11:30 மணி வரை, முக்கிய இடங்களை காண்பித்தார்.
அமெரிக்காவில் வாழும் பெருவாரியான கருபபு இன மக்களுக்கு - 1965வரை வாக்குரிமை பெறுவதில் பிரச்சனைகள் இருந்தது.
இந்தியாவில் உள்ளது
போல் - மத்திய தேர்தல் ஆணையம் அங்கு கிடையாது. இந்தியாவில் - 18 வயதான, இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் - ஜாதி, மதம்
வேறுபாடின்றி - வாக்குரிமை வழங்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்.
அமெரிக்காவில் - அந்த நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே (18 வது நூற்றாண்டு இறுதியில்) மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டு,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது போன்ற விசயங்களுக்கு மாநில அரசாங்கங்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. அதன்படி - மாநில அரசாங்கங்கள்
- வெவ்வேறு விதிமுறைகளை வைத்திருந்தனர்.
அமெரிக்காவின் தெற்கில் இருந்த அலபாமா போன்ற மாநிலங்களில் கருபபு இன மக்களுக்கு வாக்குரிமை மறுப்பதற்கே - வரி கட்டுபவர்களாக இருக்க
வேண்டும், கல்வி அறிவு இருக்க வேண்டும், கல்வி அறிவு தேர்வு எழுத வேண்டும் போன்ற விதிமுறைகளை வைத்து - அவர்களுக்கு பல
ஆண்டுகளாக வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது.
கருபபு இன மக்கள் வாக்குரிமையை பெறுவதற்காகவும், கறுப்பர் - வெள்ளையர் என பொது வசதிகள் (பள்ளிக்கூடம், பேருந்து, கழிப்பறை போன்று)
பிரிக்கப்படுவதற்கு (SEGREGATION) எதிராகவும் - மார்டின் லூதர் கிங் தலைமையில் 1950களிலும், 1960களிலும் நடத்திய போராட்டங்களின் விளைவாக மாற்றங்கள் நடைபெற்றுள்ளது.
மதிய உணவிற்கு பிறகு - அலபாமா மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் செனட்டர் ஹான்க் சென்டர்சை (Senator Hank Sanders) - 2
மணியளவில் குழுவினர் சந்தித்தனர். 3 மணி வரை இந்த சந்திப்பு நீடித்தது.
அலபாமா சட்டமன்றத்திற்கு - இரு அவைகள் உள்ளன. ஒன்று - House
of Representatives. இதில் 105 உறுப்பினர்கள் உள்ளனர். மற்றொன்று - State Senate. இதில் 35 உறுப்பினர்கள் உள்ளனர்.
72 வயது நிரம்பிய செனட்டர் ஹான்க் சென்டர்ஸ் - 1983 முதல் Senate உறுப்பினராக உள்ளார். ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்ற
இவர், டெமாக்ரட் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் - 1986இல் New
South Coaltion என்ற அமைப்பினை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த அமைப்பு - கருபபு இன மக்களின் வளர்ச்சிக்காக - கட்சி
வித்தியாசம் இன்றி நிர்வாகிகளை கொண்டு செயல்புரிந்து வருகிறது. New South Coalition அமைப்பின் செயல்பாடுகள் குறித்து செனட்டர் ஹான்க்
சென்டர்ஸ் - குழுவினருக்கு விளக்கம் வழங்கினார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|