இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, இன்று (ஏப்ரல் 05 சனிக்கிழமை) 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. திரைப்பட தயாரிப்பாளரும், அதிமுக பேச்சாளருமான இப்றாஹீம் ராவுத்தர், திரைப்பட இயக்குநர் லியாகத் அலி கான் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
கூட்ட ஏற்பாடுகளை, அதிமுக காயல்பட்டினம் கிளை துணைச் செயலாளர் கே.எ.ஷேக் அப்துல் காதிர், மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.முகைதீன் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்து வருகின்றனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |