காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 வாரங்களாக - நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றிருந்தனர்.
தங்கள் பயணத்தை ஏப்ரல் 5 அன்று முடித்துக்கொண்டு, குழுவினர் சனியன்று இரவு 8 மணியளவில், நியூயார்க் நகரின் மூன்று விமான நிலையங்களில் ஒன்றான NEWARK LIBERTY INTERNATIONAL விமான நிலையத்தில் இருந்து UNITED AIRLINES நிறுவனத்தின் நேரடி விமானம் மூலம், மும்பை புறப்பட்டனர்.
ஏப்ரல் 6 ஞாயிறு அன்று. மும்பை வழியாக சென்னை செல்லவுள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரை - என்.எச்.மஹ்மூத், ஹுஸைன் தவ்ஹீத், பி.ஒய்.எஸ்.மிஸ்கீன் ஸாதிக், ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித் அலீ உள்ளிட்ட மும்பை வாழ் காயலர்கள், மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் சந்தித்து பூச்செண்டு வழங்கி. வாழ்த்து தெரிவித்தனர்.
புகைப்படங்கள் மற்றும் தகவல்:
ஹாஃபிழ் எம்.ஏ.சி. முஜாஹித் அலீ
கூடுதல் தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
[Administrator: கூடுதல் புகைப்படங்கள் இணைக்கப்பட்டது @ 11:00 am / 08.04.2014]
|