எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்குமானால், தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என - திமுக தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவு கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், அதன் மாநில நிர்வாகிகள் பேசியுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில், மயிலாடுதுறை நாடாமன்றத் தொகுதியில், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.ஹைதர் அலீ போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரும் வகையில், அக்கட்சியின் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர், இம்மாதம் 13ஆம் நாள் முதல் மயிலாடுதுறை தொகுதியில் பரப்புரை செய்து வருகின்றனர்.
மமக தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆஸாத், மாவட்ட துணைச் செயலாளர் ‘முர்ஷித்’ முஹ்ஸின், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஜோதி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஹஸன், காயல்பட்டினம் நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், நகர செயலாளர் ஐதுரூஸ், பொருளார் எஸ்.டி.இப்றாஹீம், துணைத்தலைவர் காதர் உள்ளிட்ட கட்சியினர், வேட்பாளர் எஸ்.ஹைதர் அலீக்கு ஆதரவு கோரும் பிரசுரங்களை வீடு வீடாக வினியோகித்து ஆதரவு திரட்டினர்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |