இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
நேற்று (ஏப்ரல் 13), தொகுதியிலுள்ள கடலோரப் பகுதிகளில் அவர் வீதி வீதியாகச் சென்று ஆதரவு கோரினார். அந்த வரிசையில் காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புத்துறை) ஆகிய பகுதிகளிலும் அவர் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், துணைச் செயலாளர் ஆர்.எஸ்.கோபால் மற்றும் நிர்வாகிகளும், அங்கத்தினரும் அவருடன் இணைந்து சென்றனர்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |