தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் எ.பி.சி.வி.சண்முகத்துக்கு ஆதரவு கோரி, கேரள மாநில காங்கிரஸ் பேச்சாளர்கள் காயல்பட்டினத்தில் மலையாள மொழியில் பரப்புஐர செய்தனர். விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஏ.பி.சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரி, இம்மாதம் 14ஆம் நாள் திங்கட்கிழமை 20.00 மணியளவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பேச்சாளர் முஹம்மத் அலீ, கேரள மாநில காங்கிரஸ் இளைஞரணி செயலாளர் அன்வர் மேத்தா ஆகியோர், காயல்பட்டினம் கடற்கரை, வள்ளல் சீதக்காதி திடல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், மலையாள மொழியில் பரப்புரை செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் காங்கிரஸ் கிளை நகர செயலாளர் ஷாஹுல் ஹமீத், காயல்பட்டினம் எஸ்.எல்.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரும் பிரசுரங்கள் பொதுமக்களிடையே வினியோகிக்கப்பட்டன.
காங்கிரஸ் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |