இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரும் வகையில், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.ஆர்.மனோகரன், தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், நகர நிர்வாகிகளான என்.எம்.அகமது, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா, நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி, ஐ.அப்துல் ரஹீம் உள்ளிட்ட குழுவினர் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து பரப்புரையில் ஈடுபட்டனர்.
இதன்போது உடனிருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |