சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளையொட்டி நடத்தப்படும் போட்டிகளின் வரிசையில், அங்குள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் உறுப்பினர்களுக்கு, ஹிஃப்ழுல் குர்ஆன் – திருக்குர்ஆன் மனனப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, அம்மன்றத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஆர்வமுள்ளவர்கள், குழந்தைகள், என ஏராளமானோர் பங்குபெறுவது வழக்கம். நடப்பாண்டின் வருடாந்திர பொதுக்குழு வரும் ஏப்ரம் மாதம் 12,13 தேதிகளில் நடக்கவிருப்பதை முன்னிட்டு உறுப்பினர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தி, வென்றோருக்கு பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹிஃப்ழுல் குர்ஆன் - திருக்குர்ஆன் மனனப் போட்டி:
போட்டிகளின் வரிசையில், ஹிஃப்ழுல் குர்ஆன் - திருக்குர்ஆன் மனனப் போட்டி, இம்மாதம் 06ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று காலை உணவுக்குப் பின், 10.00 மணி முதல் 17.00 மணி வரை, சிங்கப்பூர் லவண்டரிலுள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்றத்தின் சார்பில் வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் திருக்குர்ஆன் மனன மீளாய்வு வகுப்பில் அங்கம் வகிக்கும் மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
நடுவர்கள்:
இப்போட்டியில்,
(1) காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ
(2) தமிழகத்தின் தலைசிறந்த திருக்குர்ஆன் ஓதல் கலை வல்லுநரான மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஸித்தீக் அலீ பாக்கவீ
(3) மவ்லவீ ஹாஃபிழ் என்.ஜெ.நூர் முஹம்மத் ரஸீன் ஸிராஜீ
ஆகியோர் தொலைதொடர்பு மூலமாகவும்,
(4) சிங்கப்பூர் பென்கூலன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் கய்யூம் பாக்கவீ
(5) சிங்கப்பூர் சைனா டவுண் ஜாமிஆ சூலியா பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ
ஆகியோர் நேரடியாகவும் நடுவர்களாகக் கடமையாற்றினர்.
ஒரு நடுவரின் கேள்விகளுக்கு 15 மதிப்பெண்கள் என்ற விகிதத்தில், ஒவ்வொரு போட்டியாளருக்கும் 75 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.
14.00 மணியளவில் மதிய உணவுக்கும், 16.15 மணியளவில் அஸ்ர் தொழுகைக்கும் இடைவேளை விடப்பட்டது. 17.00 மணிக்கு போட்டி நிறைவுற, முதல் மூன்று பரிசுக்குரியோர் நடுவர்களால் பின்வருமாறு அறிவிக்கப்பட்டனர்:-
முதல் பரிசு:
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
புதுக்கடைத் தெரு
காயல்பட்டினம்
(இவர், மர்ஹூம் மவ்லவீ ஷேக் அப்துல் காதிர் மிஸ்பாஹீ அவர்களின் இளைய சகோதரர் மகன்)
இவருக்குப் பரிசாக, சிங்கப்பூரிலிருந்து இந்தியா சென்று வர இருவழி விமான பயணச்சீட்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் பரிசு:
ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம்
அம்பல மரைக்காயர் தெரு
காயல்பட்டினம்
இவருக்குப் பரிசாக, சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல ஒரு வழி விமான பயணச் சீட்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மூன்றாவது பரிசு:
ஹாஃபிழ் கே.டி.ஷாஹுல் ஹமீத் பாதுஷா
குத்துக்கல் தெரு
காயல்பட்டினம்
இவருக்கு, 150 சிங்கப்பூர் டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டது.
நான்காமிடம் பெற்ற ஹாஃபிழ் எம்.செய்யித் அஹ்மதுக்கு 100 சிங்கப்பூர் டாலரும், ஐந்தாமிடம் பெற்ற ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீனுக்கு 50 சிங்கப்பூர் டாலரும் பரிசாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள 12 ஹாஃபிழ் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நடுவர்கள் உரை:
போட்டியின் நடுவர்களாகக் கடமையாற்றியோர் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினர். சிங்கை காயல் நல மன்றத்தின் இந்தப் போட்டி குறித்து பாராட்டிப் பேசிய அவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் ஹாஃபிழ்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் அமைவது மிகவும் அரிது என்றும், அந்த வகையில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றும் அவர்கள் கூறினர்.
போட்டிகளில் வென்றோருக்கான பரிசுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுக்குழு ஒன்றுகூடலில் வழங்கப்படும் எனும் தகவலை, மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 13:23 / 15.04.2014] |