மழலை மாணவ-மாணவியரின் பல்சுவை கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது விஸ்டம் பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா. இதுகுறித்த செய்தியறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விஸ்டம் பப்ளிக் பள்ளியின் முதலாமாண்டு விழா, கடந்த 21.02.2014 வெள்ளிக்கிழமை 17.30 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவர் இளவல் எம்.இஸ்மாயீல் இறைமறை ஓதி தொடங்கினார். பள்ளியின் தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ். அபூபக்கர் வரவேற்புரையாற்ற, பள்ளியின் செயலர் ஹாஜி ஏ.ஏ.ஸி. நவாஸ் அறிமுக உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் ஹனீபா பள்ளியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
அதன் பின்னர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் கணினித்துறை தலைமை பொறுப்பாளர் டாக்டர்.ஜி.வைஸ்லின் ஜிஜி சிறப்புரையாற்றினார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விஸ்டம் பள்ளியில் கடந்த மாதங்களில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளுக்கான பரிசுகளை சிறப்பு விருந்தினர் உட்பட பள்ளி நிர்வாகிகள் மாணவ, மாணவியருக்கு வழங்கி சிறப்பித்தனர்.
பரிசு பெற்ற மாணவ-மாணவியர் விபரப்பட்டியல் வருமாறு:-
பள்ளியின் மாணவ, மாணவியரால் கலைநயமிக்க பல்வேறு நிகழ்ச்சிகளான இயற்கை மற்றும் சூழலியலை மனவலிமையுடன் தாங்கும் அற்புத நடிப்பு, அனுபவ கல்வி நாடகம், இஸ்லாமிய நன்னெறி பாடல்கள், கலாசார தஃப்ஸ் நிகழ்ச்சிகள், புனித ஹஜ் கிரியை நிறைவேற்றும் பயிற்சி செய்முறைகள் உட்பட நிகழ்ச்சியின் இடையிடையே நபிவழி செய்திகள் போன்றவைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர் மற்றும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தன.
இந்நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானோர் பங்கேற்றனர். பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்டம் பப்ளிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |