செய்தி எண் (ID #) 13509 | | |
செவ்வாய், ஏப்ரல் 15, 2014 |
நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆதரவு யாருக்கு? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் அறிவிப்பு!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4179 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய |
|
நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அடுத்து யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இம்மாதம் 14ஆம் நாள் திங்கட்கிழமை கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 15) செவ்வாய்க்கிழமை அவ்வமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி வருமாறு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு யாருக்கு?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்குழு இன்று திருச்சியில் மாலை 3 மணிக்கு கூடியது. அதிமுகவுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றதனை தொடர்ந்து அடுத்தது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதனை முடிவு செய்ய இச்செயற்குழு கூடியது.
செயற்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதிகள் ஆதரவு விபரம்:-
சிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி
தென்காசி தொகுதி – புதிய தமிழகம் கட்சி
மயிலாடுதுறை, தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் – காங்கிரஸ் கட்சி
மற்ற தொகுதிகளில் திமுகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு.
விரிவான தகவல்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.
இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |