காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றதை அறிமுகப்படுத்தும் விழா, இம்மாதம் 05ஆம் நாள் சனிக்கிழமையன்று, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை செயலாளர் எஸ்.எம்.ஹஸன் மரைக்காயர் தலைமை தாங்கினார். அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, எல்.கே.துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவி எம்.ஏ.ஆயிஷா ஃபாத்திமா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவி எம்.ஏ.வஜீஹா யாஸ்மின் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் ரஊஃப் நிஸா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முதல்வர் எம்.ஏ.புகாரீ ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
இவ்விழாவில், ஓசூர் பி.எஸ்.ஏ.இன்டர்நேஷனல் சர்ட்டிஃபிகேஷன் ப்ரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் கன்சல்டன்ட் ஆண்டன், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிறுவனர் வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேடையில் அங்கம் வகித்த அனைவருக்கும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மாணவி பி.ஏ.ஃபாத்திமா ஆஃப்ரின் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
குலசேகரன்பட்டினம் ஹஸனிய்யா நடுநிலைப்பள்ளி உதவி ஆசிரியர் கே.மீரான் அலீ, விஸ்டம் பப்ளிக் பள்ளி முதல்வர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, அதன் உதவி தலைமையாசிரியர் என்.ஹைருன்னிஸா, எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்கள், சமுதாயக் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவியர், நகரப் பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |