இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.
நேற்று (ஏப்ரல் 13) காயல்பட்டினம் வந்த அவர், பரப்புரை வாகனத்திலிருந்தவாறு நகரில் வீதி வீதியாகச் சென்று ஆதரவு கோரினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், இ.எம்.சாமி, கட்சியின் நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதர், நிர்வாகிகளான காயல் மவ்லானா, என்.எம்.அகமது, என்.டி.இஸ்ஹாக் லெப்பை, என்.எஸ்.நெய்னா உட்பட பலர் அவருடன் இணைந்து சென்றனர்.
நிறைவில், காயல்பட்டினம் ஸாஹிப் அப்பா தைக்காவில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் அவர் பங்கேற்றார்.
அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |