காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - ஐ.ஐ.எம். சார்பில் நடத்தப்பட்டு வரும் ஐ.ஐ.எம். தீனிய்யாத் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி குறித்து அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அன்புள்ளவர்களே !! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
நமது IIM தீனிய்யாத் வகுப்பு 1990-ம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று வரையிலும் நல்ல முறையில் அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!
இதன் மூலம் நிறைய இளம்பிள்ளைகள் மார்க்க அடிப்படையில் ஒழுக்கவியல், அகீதா, சீரா, சூரா மனனம் , அன்றாட துஆக்கள் மனனம், தொழுகை சட்டங்கள் , திருக்குர்ஆன் விளக்கவுரை என பல பிரிவுகளில் முறையாக கற்று சென்றுள்ளார்கள் என்பது சிறப்பம்சம்.
அதைப்போன்று தற்போது அல்லாஹ்வின் கிருபையால் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் மாணவர்களுக்கு சொற்பயிற்சி மூலம் தங்களது பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு மூன்று வாரங்களுக்கு ஒருமுறை பேச்சு பயிற்சி நிகழ்ச்சி கடந்த மாதம் 09-0 3-2104 ஞாயிற்றுக்கிழமை அன்று தலைமை ஆசிரியர் மவ்லவி அல்ஹாஃபிள் M.M. நூஹ் அல்தாஃபி அவர்கள் தலைமையில் அல்ஜாமிவுல் அஜ்ஹர் நிர்வாகி மரியாதைக்குரிய மக்கி ஹாஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கலந்துக்கொண்ட மாணவர்களுக்கு எவ்வாறு பேசவேண்டும் என்பதை குறை மற்றும் நிறைகளை எடுத்து சொல்லி தலைமை ஆசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டார்.
பிறகு இப்பயிற்சியில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கும், கடந்த அரையாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு வகுப்பிலிருந்து மூன்று மாணவர்வர்களுக்கும் அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து சிறப்பு பரிசு வழங்கினார்கள்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் மே மாதம் 1 முதல் 15 வரை புதிய மாணவர்களுக்கான சேர்க்கை துவங்கவுள்ளது. நமது அல்ஜாமிவுல் அஜ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு நேரில் வந்து நிர்வாகத்தை அணுகவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |